For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்னா அடி... விராட் -படிக்கல் அதிரடி... சிக்ஸ், பவுண்டரியால் அதிர்ந்த மைதானம்... சிறப்பான வெற்றி!

மும்பை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 16வது போட்டியில் ஆர்சிபி -ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இதில் ஆர்சிபி அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

அணியின் துவக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து போட்டியை வெற்றியுடன் முடித்து வைத்தனர்.

16வது போட்டி

16வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 16வது போட்டியில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி பீல்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரர்கள் ஏமாற்றம் அளித்தனர்.

உயர்ந்த ஸ்கோர்

உயர்ந்த ஸ்கோர்

இதையடுத்து அந்த அணியின் ஷிவம் தூபே, ராகுல் டிவேட்டியா மற்றும் ரியான் பராக் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப்புகளை அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனும் 18 பந்துகளில் 21 ரன்களை அடித்து வாஷிங்டன் சுந்தர் பௌலிங்கில் அவுட்டானார்.

வாஷிங்டன் சுந்தர் அதிரடி

வாஷிங்டன் சுந்தர் அதிரடி

இதேபோல ஆர்சிபி பௌலர்கள் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட பௌலர்கள் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி அந்த அணியை அதிகமாக ரன்களை குவிக்க விடாமல் பார்த்துக் கொண்டனர். இதையடுத்து 177 ரன்களை 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு ராஜஸ்தான் அணி எடுத்திருந்தது.

விராட் -படிக்கல் சிறப்பு

விராட் -படிக்கல் சிறப்பு

இதையடுத்து 178 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய ஆர்சிபி அணியின் துவக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் ஆட்டத்தை முடித்து வைத்தனர். அவர்கள் இருவரும் இலக்கை 16.3 ஓவர்களிலேயே முடித்தனர். விராட் கோலி 72 ரன்களையும் படிக்கல் 101 ரன்களையும் குவித்தனர்.

சிறப்பான சேஸிங்

சிறப்பான சேஸிங்

அவர்களின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க மேற்கொண்ட எதிரணியின் முயற்சிகள் அனைத்தும் பலிக்காமல் போனது. 21 பந்துகள் மீதமிருந்த நிலையில் ஆர்சிபி தங்களுடைய இலக்கை அநாயாசமாக அடித்து துவம்சம் செய்தனர். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடாத படிக்கல், இந்த போட்டியில் சேர்த்து வைத்து அதிரடி காட்டினார்.

Story first published: Thursday, April 22, 2021, 23:38 [IST]
Other articles published on Apr 22, 2021
English summary
RCB won the match against RR by 10 wickets
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+