Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டாசில் நிகழ்ந்த குழப்பம்.. சஞ்சய் மஞ்சரேக்கரிடம் கோபப்பட்ட டூ பிளஸிஸ்.. என்ன நடந்தது?

கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் டூ பிளஸிஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் ஆர்சிபி அணி தரப்பில் காயமடைந்த டாப்லி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக டேவிட் வில்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் கொல்கத்தா அணி தரப்பில் அனுகுல் ராய் நீக்கப்பட்டு, 19 வயதான இளம் வீரர் சுயாஷ் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வரும் 9வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி விளையாடி வருகிறது. 4 ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தா மண்ணில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியை சந்தித்தது.

RCB won the toss and chose to Field against KKR in IPL 2023

இதனால் சொந்த மண்ணில் பெங்களூரு அணிக்கு எதிராக நடக்கும் போட்டியை வெற்றியுடன் தொடங்க கொல்கத்தா அணி முயற்சிக்கும். அதேபோல் பெங்களூரு அணி சொந்த மண்ணில் மும்பை அணியை வீழ்த்தி அசாத்திய வெற்றியை பெற்றதால், அந்த வெற்றிப் பயணத்தை தொடர வேண்டும் என்று தீவிரமாக போராடும். இந்த நிலையில் ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியுள்ள போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூ பிளஸிஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

முன்னதாக டாஸ் போடும் போது, காயின் (coin) பிட்சில் இருந்து கொஞ்சம் விலகியதால், சஞ்சய் மஞ்சரேக்கர் மீண்டும் டாஸ் போட வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். இதனால் கோபமடைந்த டூ பிளஸிஸ், நான் ஏற்கனவே டாஸ் வென்றுவிட்ட போது, ஏன் மீண்டும் டாஸ் போட வேண்டும் என்று கோபமாக கேட்டார். இதனைத் தொடர்ந்து டாஸை டூ பிளஸிஸ் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆர்சிபி அணி தரப்பில் கடந்த போட்டியில் காயமடைந்த டாப்லி அணியில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக மற்றொரு வெளிநாட்டு ஆல் ரவுண்டரான டேவிட் வில்லி சேர்க்கப்பட்டுள்ளார். கொல்கத்தா அணி தரப்பில் அனுகுல் ராய்-க்கு பதிலாக மற்றொரு இளம் வீரரான சுயாஷ் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல்முறையாக சுயாஷ் சர்மா களமிறங்க உள்ளார். இதனால் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆர்சிபி அணி விவரம்: விராட் கோலி, டூ பிளஸிஸ் ( கேப்டன் ), மேக்ஸ்வெல், பிரேஸ்வெல், தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அஹ்மத், டேவிட் வில்லி, கரண் சர்மா, ஹர்சல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்

கொல்கத்தா அணி விவரம்: மன்தீப் சிங், குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், அனுகுல் ராய், ரஸ்ஸல், ஷர்துல் தாகூர், சுனில் நரைன், டிம் சவுதி, உமேஷ் யாதவ்

Story first published: Thursday, April 6, 2023, 19:14 [IST]
Other articles published on Apr 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+