டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் பேட்டிங் செய்ய ரெடி - ரோஹித் ஷர்மா
Recommended Video

டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் பேட்டிங் செய்ய ரெடி - ரோஹித் ஷர்மா- வீடியோ
மும்பை: இந்திய ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் பேட்டிங் செய்யவும் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1479 ரன்களை குவித்துள்ளார். இதில் 3 சதங்களும்,9 அரை சதங்களும் அடங்கும். ஆனால் தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்படவில்லை.

ராகுல்,விஜய் மற்றும் தவான் ஆகிய வீரர்கள் இங்கிலாந்தில் தொடக்க நிலையில் சரியாக பேட்டிங் செய்யாத நிலையில் ,ரோஹித் சர்மா ஓப்பனிங் செய்ய ரெடி என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் பேட்டிங் இறங்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் நடந்த விழா ஒன்றில் ரோஹித் சர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, நான் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டதில்லை. ஆனால் அணியின் நிர்வாகம் விரும்பினால் நான் டெஸ்ட் போட்டிகளிலும் தொடக்க வீரராக களமிறங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர்,நான் ஒருநாள் போட்டிகளும் தொடக்க வீரராக களமிறங்குவேன் என்று நினைக்கவில்லை. ஆனால் அது எப்படியோ தானாகவே நிகழ்ந்து விட்டது. அதே போல் டெஸ்ட் போட்டிகளில் விளையாட நான் எப்போதும் தயாராகவே உள்ளேன். எந்த நிலையில் வேண்டுமானாலும் நான் களமிறங்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
எனக்கு டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெற வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் அது எனது கைகளில் இல்லை. நம் அதற்கான பயிற்சிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறேன். சரியான சமயத்தில் வாய்ப்பு கிடைக்கும் போது அதனை பயன்படுத்துவேன் என்றும் கூறினார்.
இந்திய அணி 0-2 என்ற நிலையில் பின்தங்கியுள்ளது. நம்மால் கண்டிப்பாக மீண்டு வரமுடியும் அதற்கான நம்பிக்கை நம்மிடம் இருந்தால். இதற்கு முன்னால் கூட நமது அணி இங்கிலாந்து மண்ணில் வெற்றிகளை பெற்றுள்ளது. நம்மால் முடியாதது ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார். இன்னும் 3 போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் கண்டிப்பாக இந்திய அணி வெற்றி பாதைக்கு திரும்பும் எனவும் ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய அணி மீதமிருக்கும் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் ரோஹித் சர்மாவை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Story first published: Friday, August 17, 2018, 8:39 [IST]
Other articles published on Aug 17, 2018


Click it and Unblock the Notifications