For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலியின் ராஜினாமாக்கு யார் காரணம்..? ​டிராவிட்- கங்குலி சேர்ந்து உள்குத்து? வெளியான பரபர தகவல்

சென்னை: கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாம் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வந்த நிலையில், தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒரு அதிர்ச்சி செய்தி வந்தது.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியை தழுவியதால் கோலி இந்த முடிவு எடுத்ததாக தகவல் வெளியானது

ஆனால் விராட் கோலியின் இந்த திடீர் முடிவுக்கு பி.சி.சி.ஐ.யின் முக்கிய நிர்வாகிகளே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தொடங்கிய மோதல்

தொடங்கிய மோதல்

கடந்த அக்டோபர் மாதம் டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்ததார். அதன் பின் ஐ.பி.எல். தொடரிலிருந்தும் கேப்டனாக விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். டி20 மற்றும் ஒருநாளுக்கு 2 கேப்டன்கள் இருக்க முடியாது என்று கூறிய பி.சி.சி.ஐ., கோலியை ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியது.

பி.சி.சி.ஐ.க்கு நெருக்கடி

பி.சி.சி.ஐ.க்கு நெருக்கடி

விராட் கோலியை மரியாதைக்குறைவாக பி.சி.சி.ஐ. நடத்தி விட்டதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர். அப்போது கோலியை டி20 கேப்டன் பதவியை விட்டு விலக வேண்டாம் என்று கூறியதாக பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தெரிவித்தார். ஆனால், தம்மிடம் அப்படி யாரும் கூறவில்லை என்று கோலி கூறியதால் மீண்டும் இந்திய கிரிக்கெட்டில் ஒரு பூகம்பமே உருவாகியது.

காய் நகர்த்திய பி.சி.சி.ஐ.

காய் நகர்த்திய பி.சி.சி.ஐ.

விராட் கோலியின் இந்த பேட்டியால் பி.சி.சி.ஐ. தலைமைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் தான் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இந்தியா இழந்தால் கோலியின் டெஸ்ட் பதவியையும் பறிக்க பி.சி.சி.ஐ. தயாராக இருந்தது. இதனை அறிந்த விராட் கோலி, கடுமையாக செயல்பட்டு முதல் டெஸ்டில் வென்றார். 2வது டெஸ்டில் திடீர் காயம் என்று கூறி அவர் விளையாடவில்லை

டிராவிட் தலையீடு

டிராவிட் தலையீடு

ஆனால், மூன்றாவது டெஸ்டில் இந்தியா தோற்றது. இதனால் பி.சி.சி.ஐ. பதவியை பறிக்கும் முன்பே நாமே ராஜினாமா செய்துவிடவோம் என்ற முடிவுக்கு கோலி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கேப்டனாக சுதந்திரமாக விராட் கோலியால் செயல்பட முடியவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. விராட் கோலி சீனியர் வீரர்களான புஜாரா, ரஹானேவை நீக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார். அதற்கு டிராவிட் ஒப்பு கொள்ளவில்லை. இதனால் இனி கேப்டனாக தொடர்வதில் அர்த்தமில்லை என்று கோலி இந்த முடிவுக்கு வந்துவிட்டார்.

Story first published: Saturday, January 15, 2022, 22:12 [IST]
Other articles published on Jan 15, 2022
English summary
Real Reason Behind Virat Kohli sudden decision to quit as Test Captain விராட் கோலியின் ராஜினாமாக்கு யார் காரணம்..?? டிராவிட்- கங்குலியின் கூட்டு சதியா? வெளியான அதிர்ச்சி தகவல்..
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+