For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரெண்டாவது வீடான "சென்னை"க்கு வர்றது படுகுஷியா இருக்கு!... தல டோணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியது பெருமையாக இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோணி தெரிவித்தார்.

By Vishnu Priya

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியது பெருமையாக உள்ளது என்று மகேந்திர சிங் டோணி தெரிவித்தார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுவதற்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை கடந்த ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. டோணிமீண்டும் மஞ்சள் டீசர்ட் போடவுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சென்னை ராஜா அண்ணாமலைபுரத்துக்கு வந்துள்ள மகேந்திர சிங் டோணி செய்தியாளர்களிடம் கூறுகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியது பெருமையாக உள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தது சென்னையில்தான்.

நமது பலம்

நமது பலம்

சென்னை எனக்கு 2-ஆவது வீடு. சென்னை அணியின் மீதுள்ள நம்பிக்கை மற்றும் அணிக்கான ஆதரவே நமது பலம்.

ஐபிஎல் சிறப்பாக...

ஐபிஎல் சிறப்பாக...

அனைத்து வீரர்களும் முழு திறமையை வெளிப்படுத்தும் சூழல் சென்னை அணிக்கு எப்போதும் உண்டு. சென்னை அணி மீதான எதிர்பார்ப்பே இந்தாண்டு ஐபிஎல் போட்டியை சிறந்ததாக மாற்றியுள்ளது.

2 ஆண்டுகள் ஆடாவிட்டாலும்...

2 ஆண்டுகள் ஆடாவிட்டாலும்...

அஸ்வினை சென்னை அணியில் சேர்க்க முயற்சி செய்வோம்; 18-20 வீரர்களை அணியில் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். 2 வருடங்கள் சென்னை அணி ஆடாவிட்டாலும் ரசிகர்கள் ஆதரவு கூடத்தான் செய்துள்ளது.

புரிந்து கொள்ள முடிந்தது

புரிந்து கொள்ள முடிந்தது

விக்கெட் கீப்பராக இருப்பது அணியை வழி நடத்த உதவும்.18 முதல் 20 வீரர்களை சேர்க்கவுள்ளோம். 2 ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடைவிதிக்கப்பட்டதால் வருத்தம் இருந்தாலும் நிறைய விஷயங்களை புரிந்து கொள்ள முடிந்தது என்றார் டோணி.

Story first published: Friday, January 19, 2018, 11:00 [IST]
Other articles published on Jan 19, 2018
English summary
Indian Cricket team's former captain Mahendra Singh Dhoni says that he is proud to return back to Chennai Super Kings team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X