
இந்திய அணி
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து கே.எல்.ராகுல் இந்திய அணியை வழிநடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. துணைக்கேப்டன் என்பதாலும், ஐபிஎல்-ல் ஏற்கனவே கேப்டன்சி அனுபவம் இருந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

துணைக்கேப்டன்
ஆனால் அனைவருக்கும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஜஸ்பிரித் பும்ரா துணைக்கேப்டன் என்று கூறியிருந்தது தான். அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய கேப்டன்சி அனுபம் உள்ள வீரர்கள் இருந்த போதும் பும்ராவுக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டுள்ளது

என்ன காரணம்
இந்நிலையில் இதற்கு பின்னால் முக்கிய காரணத்தை வைத்துள்ளது பிசிசிஐ. ஐபிஎல் தொடரில் 5 முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பை வென்று கொடுத்தவர் ரோகித் சர்மா. சேஸிங்கின் போது பல்வேறு இக்கட்டான சூழல்களில் ரோகித்திற்கு உதவியாக இருந்தவர் பும்ரா. ஏனென்றால் பவுலிங் கண்ட்ரோலில் தான் அந்த அணி அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. ரோகித்தின் பல முக்கிய வியூகங்களும் பும்ராவுக்கு தெரியும் என்பதால் அவரை துணைக்கேப்டனாக நியமித்துள்ளனர்.

பந்துவீச்சு திட்டம்
தென்னாப்பிரிக்க களத்தில் பந்துவீச்சு தான் முக்கிய பங்காக இருக்கும். எனவே கே.எல்.ராகுலுக்கு டெத் ஓவர்களில் பவுலிங் வியூகங்களை அமைப்பதில் ஜஸ்பிரித் பும்ரா உதவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டெத் ஓவர்களில் அவரின் பங்கு அதிகம் இருக்கலாம்.


Click it and Unblock the Notifications











