Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அரைசதம் விளாசி ரோகித் கொடுத்த ரியாக்சன்.. காரணம் என்ன தெரியுமா? மனைவி வெளியிட்ட உருக்கமான தகவல்

கவுகாத்தி : இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா அரைசதம் அடித்து வானத்தை பார்த்து எம்மோஷனாக இருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் காயத்திலிருந்து திரும்பி வந்தததால் ரோகித் இப்படி எமோஷனாக இருந்திருப்பார் என்று நினைத்தனர்.

ஆனால், ரோகித் சர்மா அப்படி இருந்ததற்கான காரணமே வேறு. ரோகித் நேற்றைய ஆட்டத்தில் தனது வழக்கமான அதிரடியை காட்டினார்.

அண்மை காலமாக ரோகித் சர்மா மீது கடும் விமர்சனம் வந்தது. முக்கியமான தொடரில் எல்லாம் ரோகித் காயமடைந்து விடுகிறார்.

விமர்சனம்

விமர்சனம்

இந்திய அணி விளையாடும் பொரும்பான்மையான போட்டியில் ரோகித் ஓய்வில் இருக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. ரோகித் சர்மா இந்திய அணியின் அனைத்து போட்டிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு இந்திய அணி மொத்தமாக 68 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. ஆனால் ரோகித் மொத்தமே 39 போட்டிகளில் தான் விளையாடி இருக்கிறார் (நேற்றைய போட்டிக்கு முன்பு வரை) .

 அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

இதனால் கபில்தேவ் கூட , ரோகித் சர்மாவுக்கு இந்திய அணியை வழி நடத்தும் அளவுக்கு உடல் தகுதி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு எல்லாம் பதிலடி தரும் விதமாக ரோகித் சர்மா இன்று அதிரடி காட்டினார். முதலில் பொறுமை காட்டிய ரோகித் சர்மா 20 ரன்களை தாண்டிய பிறகு ரஜிதா ஓவரில் 2 சிக்சர், பவுண்டரி என அடித்து அரைசதம் அடித்தார்.

 மனைவியின் உருக்கம்

மனைவியின் உருக்கம்

விமர்சனங்களுக்கு பதிலடி தந்து விட்டோம் என்று ரோகித் சர்மா இப்படி உணர்ச்சி வசப்பட்டு இருப்பார் என தெரியவந்தது ஆனால் அதற்கு காரணம் அதுவல்ல. ரோகித் சர்மாவின் வளர்ப்பு நாயான மேஜிக், நேற்று உடல் நலம் குன்றி உயிரிழந்தது. இது குறித்து ரோகித்தின் மனைவி இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள உருக்கமான பதிவில், எங்களின் உற்ற நண்பன், எங்களுடைய மகிழ்ச்சி, முதல் குழந்தை மேஜிக் பிரிந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

 இறுதி சடங்கு

இறுதி சடங்கு

விரைவில் உன்னை சந்திக்கும் வரை, எங்கள் வாழ்க்கையில் மேஜிக் இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தனது நாயின் இறுதிச் சடங்கிற்கு கூட போக முடியாத ரோகித் சர்மா, அரைசதம் அடித்த உடன் தனது நாயின் பெயரை சொல்லி வானத்தை பார்த்து, அதற்கு சமர்பணம் செய்தார். 67 பந்துளில் ரோகித் சர்மா 83 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் ஆனார். சதம் அடிக்க முடியவில்லை என்பதை விட தனது செல்லப் பிரானிக்கு இதனை பரிசாக வழங்க முடியவில்லை என்று தான் ரோகித் உருக்கமாக இருந்தார்.

Story first published: Wednesday, January 11, 2023, 6:30 [IST]
Other articles published on Jan 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+