Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி கண்டிஷன் போட்டதால், அணியிலிருந்து ரோகித் வெளியேற்றம்???

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்த நிலையில் டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்ட போது, ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பு விராட் கோலியிடமிருந்து பறிக்கப்பட்டது

ரோகித் சர்மா ஒருநாள் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் விராட் கோலி இருந்ததாக கூறப்பட்டது.

காயம்?

காயம்?

தென்னாப்பிரிக்காவிற்கு வரும் 17ஆம் தேதி புறப்பட இருந்த இந்திய அணி மும்பையில் தங்கியிருந்து 3 நாள் தனிமையில் இருந்தது. இந்த முகாமிற்கு விராட் கோலி பங்கேற்கவில்லை. மேலும் அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங் செய்யும் போது அவருக்கு பந்து பட்டு காயம் ஏற்பட்டு, அவர் டெஸ்ட் அணியிலிருந்து விலகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மாற்று வீரராக பிரியாங் பாஞ்சால் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

உண்மை என்ன?

உண்மை என்ன?

ஆனால் , இது காயம் அல்ல, சரியான திட்டம் போட்டு வெளியேற்றப்பட்டார் ரோகித் சர்மா என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரோகித் சர்மா டெஸ்ட் அணியிலிருந்தால் தாம் அணிக்கு திரும்ப மாட்டேன் என்று விராட் கோலி கூறியதாக தெரிகிறது. அவரை சமதானப்படுத்த எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டதாக தெரிகிறது

ரோகித் விலகல்

ரோகித் விலகல்

இதனை அறிந்த ரோகித் சர்மா, தாம் ஒருநாள், டி20 போட்டியில் கவனம் செலுத்தி கொள்கிறேன். இதனால் டெஸ்ட் போட்டியில் விளையாட வில்லை என்று கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் ரோகித் சர்மாவுக்கு காயம் என்று கூறி, அவரே அணியிலிருந்து சென்றதாக பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோலி திட்டம்

கோலி திட்டம்

இதே போன்று ஒருநாள், டி20 போட்டியில் விராட் கோலியும் சிறிது காலம் விளையாடமல் டெஸ்டில் மட்டும் கவனம் செலுத்துவதாக கூறி, ரோகித் அணியில் அவர் இடம்பெறாமல் ஓய்வில் இருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியில் இப்படி ஒரு விரிசல் ஏற்படும் என யாரும் நினைக்கவில்லை. எனினும் இந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.

Story first published: Monday, December 13, 2021, 21:31 [IST]
Other articles published on Dec 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+