For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிஷப் பண்ட் -க்கு ஆப்பு ரெடி.. திடீரென சஞ்சு சாம்சனை அழைத்த பிசிசிஐ.. இலங்கை தொடரில் ரோகித் ஸ்கெட்ச்

மும்பை: இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் திடீரென சஞ்சு சாம்சன் இணைக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Kohli and Pant Leaves Bio Bubble, rested for Sri Lanka's T20 Squad | OneIndia Tamil

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இதற்காக 18 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது. இதில் டெஸ்ட் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தேர்வு

முக்கிய தேர்வு

ஆனால் அதனைவிட முக்கியமான மாற்றமாக இருப்பது சஞ்சு சாம்சன் டி20 அணிக்குள் இணைக்கப்பட்டுள்ளது தான். ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் சஞ்சு சாம்சன், இந்திய அணியில் நீண்ட காலமாக சரி வர வாய்ப்பு கிடைக்காமல் ஏங்கி வருகிறார். கடந்த 2015ம் ஆண்டே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான சஞ்சு சாம்சன் 6 ஆண்டுகளில் 10 டி20 போட்டிகளில் தான் விளையாடியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?

காரணம் என்ன

காரணம் என்ன

அவரிடம் நிலையான ஆட்டம் இல்லாததே அணியில் இடம் கிடைக்காமல் போவதற்கு முக்கிய காரணம். தொடக்க போட்டியில் சதமடித்து அசத்தினால், அடுத்த 2 - 3 போட்டிகளில் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் கொடுப்பார். இதற்கு சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களும் அறிவுரைகள் கூறியுள்ளனர்.

மீண்டும் வாய்ப்பளித்த பிசிசிஐ

மீண்டும் வாய்ப்பளித்த பிசிசிஐ

இந்நிலையில் மிண்டும் அவருக்கு பிசிசிஐ வாய்ப்பு கொடுத்துள்ளது. இதற்கு காரணம் ரிஷப் பண்ட்-க்கு பயம் காட்டுவதற்காக தான். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், கடந்த சில தொடர்களாக பெரிதாக ரன் குவிக்கவில்லை. ஏதேனும் ஒரு போட்டியில் அரைசதம் அடித்துவிட்டு, அடுத்த 10 போட்டிகளில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

மிடில் ஆர்டர் கூடுதல் பலம்

மிடில் ஆர்டர் கூடுதல் பலம்

இவரின் இடத்திற்கு கே.எல்.ராகுலை கொண்டு வர முயற்சி செய்து வந்தனர். ஆனால் தற்போது ராகுலுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவரின் இடத்திற்கு மற்றொரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் அழைக்கப்பட்டுள்ளார். நல்ல ஹேண்ட் பவர் கொண்ட சாம்சன், மிடில் ஆர்டரில் அட்டகாசமாக ஆடக்கூடிய திறமைக்கொண்டவர். இந்திய அணியின் மிடில் ஆர்டரும் நல்ல பலமாக இருக்கும். எனவே இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் சஞ்சு சாம்சன் உள்ளார்.

Story first published: Saturday, February 19, 2022, 18:07 [IST]
Other articles published on Feb 19, 2022
English summary
Here is the reason for why sanju samson inclusion in Indian t20 squad against srilanka series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+