Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓ அப்படியா விஷயம்.. 2 பேர் உள்ள போதும், சூர்யகுமார் ஓப்பனரானது ஏன்?.. டிராவிட் போடும் மெகா ஸ்கெட்ச்!

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் ஓப்பனராக களமிறங்கியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ப்ரைன் லாரா மைதானத்தில் தொடங்கியது.

சீனியர் வீரர்கள் கம்பேக் கொடுத்த இந்த போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11 யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருந்தது.

ஓப்பனிங் ஜோடி

ஓப்பனிங் ஜோடி

கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங்கிற்கு கே.எல்.ராகுல் களமிறங்கவிருந்தார். ஆனால் அவர் முழு உடற்தகுதியுடன் இல்லாததால் தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னரும் இந்திய அணிக்கு இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் என இரண்டு வீரர்கள் ஓப்பனிங்கிற்கான தேர்வாக இருந்தனர். பெருமாலும் இஷானுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கருதப்பட்டது.

திடீர் மாற்றம்

திடீர் மாற்றம்

ஆனால் ஆச்சரியம் தரும் வகையில் சூர்யகுமார் யாதவ் திடீரென ஓப்பனிங்கிற்கு களமிறக்கப்பட்டார். இதன் காரணம் என்னவென்று ரசிகர்கள் குழம்பிய நிலையில் விடை கிடைத்துள்ளது. அதாவது டி20 உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணியின் ஓப்பனராக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாரேனும் ஒருவர் தான் களமிறங்குவார்கள் என்பது தான் இதற்கு காரணம்.

சாத்தியக்கூறுகள்

சாத்தியக்கூறுகள்

இந்தியா இனி ஆட்டத்தின் முதல் பந்து முதலே அதிரடி காட்டும் எனவும் பவர் ப்ளேவில் அதிக ரன் வரும் எனவும் ரோகித் வெளிப்படையாக தெரிவித்தார். இதற்காக தான் தவான் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இந்தாண்டில் கே.எல்.ராகுல் ஒரு சர்வதேச டி20 போட்டியில் கூட ஆடாததால் அவர் டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவது சந்தேகமே. இவரை விட்டால், ருதுராஜ் கெயிக்வாட், சுப்மன் கில் போன்ற அனுபவம் குறைந்த வீரர்கள் உள்ளனர். எனவே தான் மிடில் ஆர்டரில் இருக்கும் சீனியர் வீரர்களை ஓப்பனிங்கிற்காக பழக்கப்படுத்தி வருகிறார் டிராவிட்.

Recommended Video

IND vs ENG 3rd ODI: செய்ய வேண்டிய Changes என்ன? | Aanee's Appeal | *Cricket
 மிடில் ஆர்டர் தேவை

மிடில் ஆர்டர் தேவை

இந்தியாவின் மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் ஆகிய 4 வீரர்களுமே டி20 உலகக்கோப்பைக்கு தேவை. எனவே இவர்களுக்கு வாய்ப்பு தந்தே ஆக வேண்டும். அனைவரும் ப்ளேயிங் 11ல் இடம்பெற்றால் பவுலிங்கிற்கு இடம் இருக்காது. எனவே ஓப்பனிங்கிற்கென்று ஒரு வீரரை தேர்வு செய்யாமல், இவர்கள் 5 பேரில் இருந்து ஒருவரை ஓப்பனிங் களமிறக்கி வருகிறார்கள்.

உறுதியான திட்டம்

உறுதியான திட்டம்

இங்கிலாந்து அணியுடனான தொடரில் திடீரென ரிஷப் பண்ட், தீபக் ஹூடா போன்றோரை ஓப்பனிங் ஆட வைத்திருந்தார் ராகுல் டிரவிட். தற்போது சூர்யகுமார் யாதவை பயன்படுத்துகிறார். இதன்மூலம் டி20 உலகக்கோப்பைக்கான திட்டம் இதுதான் என்பது உறுதியாகியுள்ளது.

Story first published: Friday, July 29, 2022, 20:43 [IST]
Other articles published on Jul 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+