For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனியின் திடீர் டென்னிஸ் ஆர்வம்..!! பொழுதுப்போக்கு அல்ல உண்மையான காரணமே வேற..!! இது தோனி ஸ்டைல்..!!

ராஞ்சி: ஐ.பி.எல். மெகா ஏலத்தில் எந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும், சென்னை அணியின் யுத்திகளை தயார் செய்வதற்காக தோனி, கடந்த சில நாட்களாக சென்னையில் தங்கி இருந்தார்.

பெங்களூருவில் வரும் 12ஆம் தேதி நடைபெறும் எலத்தில் தோனி பங்கேற்பார் என்ற தகவல் முதலில் வெளியானது.

ஆனால், தோனி தனது பணியை முடித்து கொண்டு ராஞ்சி புறப்பட்டு சென்றார். ராஞ்சி சென்றதுமே தோனி டென்னிஸ் பயிற்சியில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்.

தோனியின் ரகசியம்

தோனியின் ரகசியம்

என்ன டா.. இது ஐ.பி.எல். போட்டிகளை வைத்து கொண்டு தல டென்னிஸ் விளையாடுகிறாரே என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கு பின்னால் இருக்கும் காரணமே வேறு. தோனி எப்போதும் கிரிக்கெட் தொடருக்கு தயாராகுவதற்கு முன்பு தனது உடல் தகுதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவார். உடல் தகுதி சிறப்பாக இருந்தால் தான் களத்தில் ஜொலிக்க முடியும் என்பது தோனியின் வெற்றி மந்திரம். உடல் தகுதிக்காக தோனி கால்பந்து, பேட்மிண்டன் விளையாட்டில் கவனம் செலுத்துவார். அப்போது ஏன் டென்னிஸ் என்று கேட்கிறீர்களா.. காரணம் இருக்கு..!!

ஏன் டென்னிஸ்?

ஏன் டென்னிஸ்?

இந்த நிலையில், கிரிக்கெட்டிற்கு கையும், கண்ணும் ஒருங்கிணைந்த செயல்படுவது மிகவும் முக்கியம். கால்களை நகர்த்தாமல் சேவாக், தோனி போன்று விளையாடும் வீரர்கள் கையையும், கண்களையுமே மட்டும் நம்புவார்கள். (சேவாக் கண் பார்வை குறைப்பாட்டால் தான் , அவரது ஆட்டம் பாதிக்கப்பட்டு விலகினார். இல்லை என்றாலும் இன்றும் அவர் ராஜா தான்)

காரணம்

காரணம்

தற்போது தோனிக்கு 40 வயதாகிவிட்டது. இதனால் உடல் முன்பு போல் ஒத்துழைக்காது. அவர் மூளையில் நினைக்கும் ஷாட்டை ஆட , அவரது தசைகள் ஒத்துழைக்காது. அந்த தசைகளை மூளை நினைக்கும் வேகத்தில் செயல்படுத்த வேண்டும் என்றால், அதற்கு டென்னிஸ் ஒரு நல்ல பயிற்சி. இதனால் தோனி டென்னிஸ் பயிற்சியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

Recommended Video

Rishabh Pant-க்கு வாய்ப்பு கொடுத்த BCCI.. Dhoni-ன் வார்த்தைகளை நினைவுகூரும் ரசிகர்கள்
தயாராகும் தோனி

தயாராகும் தோனி

தோனி டென்னிஸ் விளையாடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானதும், அவர் பொழுது போக்கிற்காக விளையாடுகிறார் என்று நினைக்க வேண்டாம். பேட்டிங்கில் ஜொலிப்பதற்கான மற்றொரு பயிற்சியும் டென்னிஸ் தான். சச்சின் டெண்டுல்கர் கூட தனது ஓய்வு நேரத்தில் டென்னிஸ் விளையாடுவார். இதனால் 2 மாதத்திற்கு முன்பே தோனி தனது பயிற்சியை தொடங்கிவிட்டார்.

Story first published: Wednesday, February 2, 2022, 12:25 [IST]
Other articles published on Feb 2, 2022
English summary
Reason Behind Why MS Dhoni Playing Tennis ahead of IPL season 15 தோனியின் திடீர் டென்னிஸ் ஆர்வம்..!! பொழுதுப்போக்கு அல்ல உண்மையான காரணமே வேற..!! இது தோனி ஸ்டைல்..!!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+