Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காப்பி அடிச்சிருந்தா கூட ஜெய்ச்சி இருக்கலாம்..!! கோட்டை விட்ட நியூசிலாந்து..

இந்தியாவுக்கு எதிரான இருபது ஓவர் தொடரை நியூசிலாந்து அணி இழந்தது.நேற்று ராஞ்சியில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ரோகித், ராகுலின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் ராகுல் டிராவிட், ரோகித் சர்மா கூட்டணி முதல் தொடரிலேயே வென்று அசத்தியுள்ளது. டி20 உலகக் கோப்பையில் இழந்த தோல்விக்கு நல்ல மருந்தாக இந்திய அணி அமைந்துள்ளது.

சூப்பர் பிளான்

சூப்பர் பிளான்

நேற்றைய ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இதனால் முதல் 4 ஓவர்களில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் திணறினர். பந்தும் பேட்டிற்கு வேகமாக வந்தது. இதனை பயன்படுத்தி கொண்டு நியுசிலாந்து வீரர்களும் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். முதலில் அடிவாங்கி பின்னர் வில்லனை தாக்கும் எம்.ஜி.ஆரை. போல், நியூசிலாந்து வீரர்களுக்கு பதிலடி தந்தனர் இந்திய வீரர்கள். இதற்காக பெரியதாக ஒன்றும் செய்யவில்லை. வீசிய பந்தின் வேகத்தை குறைக்க,அதனை அடித்து ஆட முற்பட்டு நியூசிலாந்து வீரர்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

காப்பியடிக்காத நியூசி,

காப்பியடிக்காத நியூசி,

அனைத்து பள்ளியிலும் எதேனும் ஒரு நல்ல மாணவன் இருப்பான். அவனுக்கு தேர்வில் விடை தெரியவில்லை என்றாலும் காப்பி அடிக்கவே மாட்டான். நேற்று அந்த நல்ல மாணவனை போல் தான் நியூசிலாந்து விளையாடியது. பந்தின் வேகத்தை குறைத்து வீசினால் விக்கெட் கிடைக்கும் என இந்தியாவை பார்த்தும், நியூசிலாந்து வீரர்கள் பந்தை வேகமாக தான் வீசினார்கள். இந்தியாவின் யுத்தியை காப்பி அடித்திருந்தால் கூட நியூசிலாந்து அணி தப்பித்திருக்கும்

புதிய பந்து

புதிய பந்து

நியூசிலாந்து பந்து வீசும் போது, பனிக்காரணமாக, பந்தும் கடுமையான சேதம் அடைந்தது. இதனால் எங்களுக்கு புதிய பந்து வேண்டும் என்று இன்னிங்சின் பாதியில் நியூசிலாந்து அணி கேட்டு வாங்கினர். ஆனால் புனிப்பொழிவு அதிகம் இருந்தால் புதிய பந்து என்றுமே பேட்ஸ்மேன்களுக்கு தான் சாதகமாக இருக்கும். நேற்றைய ஆட்டத்தில் கூட இந்திய அணியின் ரன் குவிப்பு வேகம் தடைப்பட்டது. ஆனால் புதிய பந்து வந்தவுடன் இந்திய வீரர்கள் அடித்து ஆட தொடங்கினர்.

Recommended Video

New Zealand Batting-ஐ கட்டுபடுத்த Rohit Sharma போட்ட திட்டம்
கடைசிப் போட்டி

கடைசிப் போட்டி

கடைசி டி20 போட்டி நடைபெறும் கொல்கத்தாவிலும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இதனால் டாஸை யார் வெல்கிறார்களோ, அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு கிடைக்கும். முதல் 2 போட்டியிலும் டாஸ் வென்றதால் இந்திய அணி தப்பியது. இத்தகைய சூழலில் இந்திய அணி என்ன செய்யும் என்பதையும் நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Saturday, November 20, 2021, 17:31 [IST]
Other articles published on Nov 20, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+