Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி பேட்டிங்கில் தப்பு இருக்கு.. அவர் அவராகவே இல்லை.. கோலியின் சிறுவயது பயிற்சியாளர் கவலை

டெல்லி: விராட் கோலியின் பேட்டிங்கில் சில தவறுகளை செய்வதாக அவரது இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

Recommended Video

IND vs SL: We Have Seen Ravindra Jadeja Grow As A Batter – Rohit Sharma | Oneindia Tamil

விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. கோலி, தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறினார்.

பலம் குன்றிய இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது 100வது டெஸ்டில் 45 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

திணறல்

திணறல்

சரி, பெங்களூருவில் நடைபெற்ற 2வது டெஸ்டிலாவது சாதிப்பார் என்று பார்த்தால், அதில் 23 மற்றும் 13 ரன்கள் மட்டுமே எடுத்து கோலி ஒரே மாதிரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் விளைவாக விராட் கோலியில் டெஸ்ட் சராசரி 2017ஆம் ஆண்டுக்கு பிறகு 50க்கு கீழ் சென்றது. கோலி தீவிர பயிற்சி செய்தாலும், ரன் அடிக்க திணறுகிறார்.

என்ன காரணம்

என்ன காரணம்

குறிப்பாக இன் ஸ்விங், ஆப் சைடிலிருந்து ஸ்டம்பை நோக்கி வரும் பந்தை கணிக்க முடியாமல் விராட் கோலி தொடர்ந்து அவுட் ஆகிறார். இந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலியின் இளம் வயது பயிற்சியாளர் ராஜ்குமார், விராட் கோலி பேட்டிங் செய்யும் போது மிகவும் பதற்றத்துடன் விளையாடுவதே, அவரால் ரன் குவிக்க முடியாததற்கு காரணம் என்று தெரிவித்தார்.

சகஜமாக விளையாடனும்

சகஜமாக விளையாடனும்

விராட் கோலி எப்போதும் சகஜமாக விளையாடக் கூடியவர். ஆனால் தற்போது இறுக்கமாக விளையாடுகிறார். அவர் முன்பு போல் களத்தில் சகஜமாக இருக்க வேண்டும். இதனை செய்தால் அவர் முன்பு போல் ரன் குவிப்பார். கடினமான விக்கெட்டுகளில் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் போல் கோலி அதிரடியாக ஆடி இருக்க வேண்டும்.

அகாடமிக்கு அழைப்பு

அகாடமிக்கு அழைப்பு

விராட் கோலி அடிப்படை விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அடிப்படை விஷயத்தில் தான் தவறு நிகழ்கிறது. இதனை சரி செய்ய விராட் கோலியை கிரிக்கெட் அகாடமிக்கு அழைக்கலாம் என்று நினைக்கிறேன். இங்கு வந்து பயிற்சி மேற்கொள்ளும்படி அவரிடம் கூற உள்ளேன்.இங்கு வந்து விளையாடினால் விராட் கோலிக்கு மீண்டும் ஊக்கம் கிடைக்கும்.

Story first published: Wednesday, March 16, 2022, 14:55 [IST]
Other articles published on Mar 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+