Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உமேஷின் விரலில் ரோகித்தின் திருமண மோதிரம்... ஹோட்டலில் நடந்த வேடிக்கை சம்பவம்.. கோலி செய்த சேட்டை

மும்பை: ரோகித் சர்மா செய்த தவறை இந்திய அணி முழுவதும் விராட் கோலி பெரிய செய்தியாக விவரித்த சுவாரஸ்ய சம்பவம் தெரியவந்துள்ளது.

இந்திய அணியில் மிக முக்கிய வீரராக விளங்குபவர் ரோகித் சர்மா. இவர் அணியின் துணை கேப்டனாகவும் விளங்கி வருகிறார்.

களத்தில் முதலில் மிக நிதானமாக விளையாடும் ரோகித் சர்மா, பின்னர் எதிரணி பவுலர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியவர் ஆவார்.

நியாபக மறதி

நியாபக மறதி

இத்தகைய மிரட்டல் சம்பவங்களை செய்யும் ரோகித் சர்மாவுக்கு நியாப மறதி பெரும் பிரச்னையாக உள்ளது வெளியில் பெரியளவில் யாருக்கும் தெரியாது. ரோகித் சர்மா பயணங்களின் போதும், ஹோட்டல் அறைகளை காலி செய்துவிட்டு வரும் போதும் பல பொருட்களை மறந்துவிடும் பழக்கம் கொண்டவராக இருந்துள்ளார். இது இன்றும் தொடர்கிறது என்று கூறப்படுகிறது.

மோதிரம்

மோதிரம்

பாஸ்போர்ட், வாட்ச், செல்போன், மொபைல் டேப்ளட் போன்றவற்றை ஹோட்டல் அறையிலேயோ அல்லது அணியின் பேருந்திலேயோ மறந்து தவறவிட்டு வந்த ரோகித் சர்மா, ஒரு முறை தனது திருமண மோதிரத்தையும் மறந்துவிட்டு வந்துள்ளது வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ரோகித் சர்மா - ரித்திகா ஆகியோருக்கு கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது அவர்களுக்கு சமைரா என்ற மகளும் உள்ளார்.

சுவாரஸ்ய சம்பவம்

சுவாரஸ்ய சம்பவம்

2017ல் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த ரோகித், எனக்கு எப்போதும் தாமதமாக எழுந்து விமானத்தை அவசர அவசரமாக பிடிப்பது வாடிக்கையாகிவிட்டது. இதன் காரணமாக சக வீரர்களை கிளம்பும் போது கதவை தட்டி எழுப்பிவிட கூறுவேன். அப்படி ஒரு முறை அவசரமாக கிளம்பும் போது திருமண மோதிரத்தை ஹோட்டல் அறையில் மறந்து வைத்துவிட்டேன்.

கோலி செய்த சேட்டை

கோலி செய்த சேட்டை

பின்னர் அந்த மோதிரத்தை காணவில்லை என நான் பார்க்கும் போது, அது உமேஷ் யாதவின் விரல்களில் இருந்தது. உடனடியாக நான் யாருக்கும் விஷயம் தெரியாமல் மோதிரத்தை வாங்கித்தரும்படி ஹர்பஜனிடம் கேட்டேன். ஆனால் விராட் கோலி அனைத்தையும் கெடுத்துவிட்டார். அதை ஒரு பெரும் செய்தி போன்று இந்திய அணி முழுவதும் பரப்பிவிட்டார் என தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா மிகவும் ஜாலியான மனிதர் என்பது ரசிகர்கள் அறிந்ததே. ஆனால் இப்படி ஒரு வேடிக்கை சம்பவம் அவர் வாழ்வில் நடைபெற்றுள்ளது தற்போது தான் தெரியவந்துள்ளது.

Story first published: Wednesday, June 9, 2021, 19:53 [IST]
Other articles published on Jun 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+