Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சினின் டிவிட்டர் சாதனை 'ஹோகயா'... முறியடித்தார் விராத் கோஹ்லி!

பெங்களூர்: விராத் கோஹ்லியின் செல்வாக்கு சின்ன கேப்புக்குப் பின்னர் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. தற்போது அவர் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் டிவிட்டர் சாதனையை முறியடித்துள்ளார்.

டிவிட்டரில் அதிக அளவிலான பின் தொடர்பவர்களை வைத்துள்ள விளையாட்டு வீரராக அவர் உருவெடுத்துள்ளார். இதுவரை இந்த சாதனையை சச்சின்தான் வைத்திருந்தார். தற்போது கோஹ்லி முன்னுக்கு வந்து விட்டார். சச்சின் பின்னுக்குப் போய் விட்டார்.

Record: Virat Kohli surpasses Sachin Tendulkar

சர்வதேச கிரிக்கெட்டில் நிறைய செல்வாக்குடன் வளரந்து வருபவர் கோஹ்லி. இவருக்கு டிவிட்டரில் சச்சினை விட பின் தொடர்பவர்கள் உள்ளனர்.

தற்போது சச்சினை விட 5000க்கும் மேற்பட்ட பின் தொடர்பவர்கள் அதிகம் உள்ளனர். கடந்த அக்டோபர் மாதம், கோஹ்லி 40 லட்சம் பின் தொடர்பாளர்களைக் கொண்டிருந்தார். இதை ஒரு செல்பி படம் மூலம் மகிழ்ச்சியுடனும் தெரிவித்திருந்தார்.

Record: Virat Kohli surpasses Sachin Tendulkar

கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் டிவிட்டரில் இணைந்திருந்தார் கோஹ்லி. டெண்டுல்கர் 2010 ஏப்ரல் முதல் டிவிட்டரில் இருந்து வருகிறார்.

சமீபத்தில்தான் முதல் முறையாக டெஸ்ட் கேப்டன் பதவியை ஏற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை சந்தித்தார் கோஹ்லி. இந்தப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தாலும் கோஹ்லி இரு இன்னிங்ஸ்களிலும் சதம் போட்டார் ன்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 24, 2014, 15:43 [IST]
Other articles published on Dec 24, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+