Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சவால்கள்... நெருக்கடிகள்... ரிலாக்சாக கடற்கரையில் பொழுதை போக்கிய ரோகித்

அபுதாபி : ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 தொடர்களில் விளையாடவுள்ள இந்திய அணியில் ரோகித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை.

தொடையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக கடந்த மும்பை இந்தியன்சின் 2 போட்டிகளில் ரோகித் சர்மா பங்கேற்கவில்லை.

இந்நிலையில், யூஏஇயில் தன்னுடைய மனைவி ரித்திகா சஜ்தேவுடன் கடற்கரையில் அவர் இனிமையாக பொழுதை போக்கியுள்ளார். இதன் புகைப்படத்தையும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

போட்டிகளில் பங்கேற்காத ரோகித்

போட்டிகளில் பங்கேற்காத ரோகித்

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. 14 புள்ளிகளுடன் முதன்மை இடத்தில் உள்ள அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த இரு போட்டிகளில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக கீரன் பொல்லார்ட் கேப்டன் பொறுப்பை வகித்து வருகிறார்.

நெட் பிராக்டீசில் ரோகித்

நெட் பிராக்டீசில் ரோகித்

இந்நிலையில் அபுதாபியில் ஆர்சிபி அணிக்கு எதிராக இன்று மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கேற்ப அவர் நெட் பிராக்டீசில் ஈடுபட்டுள்ள புகைப்படங்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இடம்பெறாத ரோகித்

இடம்பெறாத ரோகித்

கடந்த திங்கட்கிழமை ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மூன்று வடிவங்களிலும் ரோகித் சாமாவின் பெயர் இடம்பெறவில்லை. மாறாக, அவரது பிட்னஸ் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் பொழுதுபோக்கு

கடற்கரையில் பொழுதுபோக்கு

இந்திய தேர்வாளர்களின் இந்த செயல்பாட்டிற்கு மறைமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் ரோகித் சர்மா. ஆயினும் எத்தகைய நெருக்கடி வந்தாலும் தான் சமாளிப்பேன் என்னும் வகையாக அவர் செயல்பாடு உள்ளது. இந்த நெருக்கடியிலும் தன்னுடைய மனைவி ரித்திகாவுடன் கடற்கரையில் அவர் இனிமையாக பொழுதை போக்கினார். இதன் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.

Story first published: Wednesday, October 28, 2020, 13:31 [IST]
Other articles published on Oct 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+