Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் 2022-ல் வருகிறது “ஜியோ மைதானம்”.. பிசிசிஐ கொடுத்த ஸ்பெஷல் அனுமதி.. ரசிகர்கள் கொந்தளிப்பு!

மும்பை: ஐபிஎல் தொடரில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மைதானமும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

Recommended Video

IPL 2022ல் Reliance Jio Stadium! Mumbaiயில் Venue List | OneIndia Tamil

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 15வது சீசனுக்கான முன்னேற்பாடுகளில் பிசிசிஐ தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அடுத்த வாரத்தில் அட்டவணை வெளியாகலாம்.

10 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனுக்கான மெகா ஏலம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்குகின்றன.

ஐபிஎல் அட்டவணை

ஐபிஎல் அட்டவணை

மார்ச் மாதத்தின் இறுதியில் 27ம் தேதியன்று ஐபிஎல் போட்டிகள் தொடங்கி மே மாதம் முதல் வாரம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமாக 74 போட்டிகள் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் போட்டிகள் அனைத்துமே ஒரே ஒரு நகரத்தில் மட்டுமே நடைபெறவுள்ளது.

போட்டிகள் எங்கெங்கு?

போட்டிகள் எங்கெங்கு?

கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதால் 70 லீக் போட்டிகளையும் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுகளை அகமதாபாத்தில் நடத்தவுள்ளது. இதற்காக மொத்தமாக இதுவரை வான்கடே, ப்ராபேர்ன் ஸ்டேடியம், D.Y. பாட்டில் ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம், மும்பை கிரிக்கெட் வாரிய ஸ்டேடியம், அகமதாபாத் என 5 மைதானங்கள் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளது

ஜியோ மைதானம்

ஜியோ மைதானம்

இந்நிலையில் இதில் 6வதாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மைதானமும் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் நாவி மும்பை பகுதியில் அமைந்துள்ள இந்த ஜியோ மைதானத்தில் அதி நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அயல்நாடுகளில் உள்ளது போன்றே கருவிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

ஒப்புதல் வந்ததா?

ஒப்புதல் வந்ததா?

இந்த மைதானத்திற்கு பிசிசிஐ ஒப்புதல் கொடுத்துள்ளது. எனினும் ஐபிஎல்-ல் சேர்க்கப்படுமா என்பது குறித்து ஒளிபரபரப்பு நிறுவனங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதற்கான ஒப்புதலுக்காக தான் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் இறுதிசெய்யப்பட்டு ஐபிஎல் அட்டவணை வெளியிடப்படும்.

ரசிகர்கள் கொந்தளிப்பு

ரசிகர்கள் கொந்தளிப்பு

பிசிசிஐ-ன் முடிவுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மும்பை அணி தனது செல்வாக்கை பயன்படுத்திதான் கோப்பைகளை வெல்கிறது என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் தற்போது மைதானமும் அவர்களின் மைதானமும் சேர்க்கப்பட்டால் என்ன முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது எனத்தெரிவித்துள்ளது.

Story first published: Saturday, February 19, 2022, 14:09 [IST]
Other articles published on Feb 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+