For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித் சர்மாவின் மகத்தான சாதனை.. கோலி, தோனி, சச்சின் கூட செய்யல.. உலக அளவில் 4வது இடம்.. விவரம்

நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மற்ற இந்திய வீரர்கள் தடுமாறிய நிலையில் கேப்டன் ரோகித் சர்மா சதம் விளாசி அசத்தியிருக்கிறார்.

ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு ஆட்டம் இழந்த நிலையில் இந்திய அணியில் ரோகித் சர்மா மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்த்து வருகிறார்.

முதலில் ஆடுகளம் பெரிய அளவில் பேட்ஸ்மேன்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தவில்லை. அந்த நிலையிலும் இந்திய அணி வீரர்கள் மோசமான ஷாட் தேர்வு மூலம் தங்களது விக்கெட்டை பறி கொடுத்தார்கள்.

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

கேஎல் ராகுல் ஃபார்மில் இல்லாதது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஏனென்றால் அவர் பந்தை எதிர்கொண்டு ரன்கள் சேர்க்கவே அப்படி திணறினார். சரி புஜாரா ரஞ்சி கிரிக்கெட் எல்லாம் விளையாடி நல்ல பார்மில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேவையில்லாமல் ஸ்வீப் ஷாட் ஆடி தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.விராட் கோலியும் சொற்ப ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.

 ரோகித் சாதனை

ரோகித் சாதனை

ரோகித் சர்மா மட்டும் தனி ஆளாக நின்று இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் ரோகித் சர்மா 171 பந்துகளை எதிர் கொண்டு சதம் விளாசினார். இந்த ஆட்ட மூலம் ரோகித் சர்மா வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். அதாவது கேப்டனாக டெஸ்ட் ,ஒரு நாள், டி20 என அனைத்து போட்டிகளிலும் சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்திருக்கிறார்.

முதல் இந்திய கேப்டன்

முதல் இந்திய கேப்டன்

இந்த சாதனையை விராட் கோலி, தோனி ,சச்சின் கூட செய்ததில்லை. சர்வதேச அளவில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் விளாசிய 4வது கேப்டன் என்ற பெருமையை அவர் படைத்திருக்கிறார். மேலும் சொந்த மண்ணில் அதிக சராசரி வைத்துள்ள வீரர் என்று பெருமையையும் ரோகித் சர்மா பெற்றிருக்கிறார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா ஜாம்பவான் டான் பிராட்மேன் முதலிடத்தில் உள்ளார். தற்போது வரை இந்திய அணி 212 ரன்கள் அடித்துள்ள நிலையில் அதில் ரோகித் சர்மாவின் ஸ்கோர் மட்டும் 110 ஆகும்.

அடுத்தது என்ன?

அடுத்தது என்ன?

அந்த அளவுக்கு ரோகித் சர்மா தனி ஆளாக நின்று போராடி இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது. இந்த இன்னிங்ஸில் ரோகித் சர்மா 150 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறார். ஏனென்றால் நான்காவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய இந்த ஆடுகளம் மிகவும் கடினமாக இருக்கும். அப்போது 100 ரன்கள் என்ற இலக்கை எட்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடும். இதன் காரணமாக முதலில் இன்னிங்ஸில் பெரிய ஸ்கோரை நிர்ணயித்து மீண்டும் ஆஸ்திரேலியாவை குறைந்த ரன்களில் சுருட்டி இன்னிங்ஸ் வெற்றி பெற இந்தியா முயற்சி செய்ய வேண்டும்.

Story first published: Friday, February 10, 2023, 14:13 [IST]
Other articles published on Feb 10, 2023
English summary
Remarkable record by Rohit sharma as first indian captain to achieve this feet
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+