ட்ரேடிங் விண்டோ ரெடியா??.. பரபரப்பு கட்டத்தில் ஜடேஜா - சிஎஸ்கே பிரச்சினை.. என்னதான் நடக்கிறது?
சென்னை: சென்னை அணியில் இருந்து வெளியேறுவதற்காக ஜடேஜா முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடர் முடிவடைந்து 3 மாதங்கள் ஆன போதும், அதில் சிஎஸ்கேவின் சர்ச்சை மட்டும் இன்னும் தீரவில்லை.
தொடர் தோல்விகள், கேப்டன்சி மாற்றம், ஜடேஜாவுடன் மோதல் என கடந்தாண்டு பல பிரச்சினைகளை சென்னை அணி நிர்வாகம் எதிர்கொண்டது.

என்ன காரணம்
ரவீந்திர ஜடேஜாவின் தலைமையில் சிஎஸ்கே அணி சொதப்பியதை அடுத்து அவர் கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கினார். ஆனால் அந்த விவகாரத்தில் ஜடேஜாவுக்கும் - சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், இனி அந்த அணியில் விளையாட மாட்டார் எனவும் தகவல் வெளியானது.

ஜடேஜாவின் செயல்
இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஜடேஜா தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து சிஎஸ்கே தொடர்பான அனைத்து பதிவுகளையும் நீக்கினார். குறிப்பாக சிஎஸ்கேவில் மேலும் 10 ஆண்டுகள் விளையாட வேண்டும் என்ற போட்டிருந்த பதிவையும் நீக்கினார். இதே போல தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த வீடியோவில் ஜடேஜா மட்டும் இடம்பெறாமல் போனது.

ட்ரேடிங் விண்டோ
இந்நிலையில் ஜடேஜா வெளியேறுவது உறுதியாகியுள்ளது. அதாவது ட்ரேடிங் விண்டோ மூலம் தன்னை எடுக்க விரும்பும் அணிகள் பேச்சுவார்த்தையை தொடங்கலாம் என ஜடேஜா கூறியுள்ளதாக தெரிகிறது. பெரும்பாலும் மும்பை அணிக்கு அவர் செல்வார் எனத்தெரிகிறது.

ஐபிஎல் விதிகள்
இது ஒருபுறம் இருக்க, ஐபிஎல் விதிகளின் படி ஒரு வீரரால், தன்னை ட்ரேடிங் விண்டோவில் எடுத்துக்கொள்ளுங்கள், நான் விலகுகிறேன் எனக்கூற முடியாது. சம்மந்தப்பட்ட அணி நிர்வாகம் தான் வீரரின் பெயரை அறிவித்து ட்ரேடிங்கில் மாற்ற வேண்டும். எனவே இதற்காக சிஎஸ்கே நிர்வாகம் விரைவில் ஜடேஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications