Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ஸ்ரேயாஸ் எடுத்த திடீர் முடிவு”.. நன்றி மறந்த டெல்லி அணிக்கு தகுந்த பதிலடி.. குளிர்காயும் புதிய அணி

சென்னை: டெல்லி அணியால் கழட்டிவிடப்பட்ட இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், தகுந்த பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளார்.

Recommended Video

Shreyas as Ahmedabad Team Captain? | IPL 2022 Auction | OneIndia Tamil

2022ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் ஜனவரி 2வது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை 2 புதிய அணிகளின் வருகையால், ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடிந்தது. அந்த பட்டியலும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்

ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்

இந்த அறிவிப்புகளில் டெல்லி அணியின் பட்டியல் தான் சற்று ஏமாற்றும் விதமாக இருந்தது. ஏனென்றால் அந்த அணியின் மிக முக்கிய வீரராக பார்க்கப்படும் ஸ்ரேயாஸ் ஐயர் தக்கவைக்கப்படவில்லை. இதனால் கடும் கோபத்துடன் இருந்த அவர், மெகா ஏலத்தின் போது பெரும் தொகைக்கு வாங்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே தனது பதிலடியை கொடுத்துள்ளார்.

என்ன ஆனது

என்ன ஆனது

புதிதாக வந்துள்ள அகமதாபாத் அணி, ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக முன் நிறுத்தி வீரர்களை ஒப்பந்தம் செய்யும் பணியை தொடங்கியுள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அந்த அணி இதற்கு முன்பு ரெய்னா, டேவிட் வார்னர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தியது. ஆனால் அவர்களிடம் சம்பளம் குறித்து உடன்பாடு எட்டப்படவில்லை. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் தனக்கு சம்பள எதிர்பார்ப்புகள் பெரியளவில் கிடையாது, ஆனால் கேப்டனாக நியமித்தே ஆக வேண்டும் என்ற நிபந்தனை மட்டும் விதித்துள்ளார்.

ஒப்புக்கொண்ட அகமதாபாத்

ஒப்புக்கொண்ட அகமதாபாத்

27 வயதாகும் ஸ்ரேயாஸ் ஐயர், தற்போது தான் இந்திய அணிக்குள் நுழைந்து கலக்கி வருகிறார். இவரை கேப்டனாக நியமித்தால் இன்னும் 8 வருடங்கள் வரை கேப்டன்சிக்கு எந்தவித பிரச்சினையும் இருக்காது. எனவே இதனை மனதில் வைத்து தான் ஸ்ரேயாஸ் ஐயரை ஒருமனதாக கேப்டனாக நியமித்துள்ளது அகமதாபாத் அணி.

சிறந்த கேப்டன்சி

சிறந்த கேப்டன்சி

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல்-ல் அறிமுகமான அவரை டெல்லி அணி இவரை 2.6 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது. அதன்பிறகு 2018ம் ஆண்டு முழு நேர கேப்டனாக செயல்பட தொடங்கிய ஸ்ரேயாஸ், அதே ஆண்டில் அந்த அணியை ப்ளே ஆஃப்-க்கு முன்னேற வைத்தார். அதன் பின்னர் 2020ஆம் ஆண்டு இறுதிப் போட்டிவரை அழைத்துச் சென்று, டெல்லி அணியை சக்திவாயந்ததாக மாற்றினார்.

பழிவாங்க துடிப்பு

பழிவாங்க துடிப்பு

ஆனால் அவரின் கேப்டன்சி பயணம் 2021ல் முடிவுக்கு வந்தது. ஐபிஎல்-ன் போது அவர் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்ததால் முதல் பாதி ஆட்டங்களின்போது இளம் வீரர் ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட்டார். 2வது பாதியில் மீண்டும் ஸ்ரேயாஸுக்கு பொறுப்பு திருப்பி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டெல்லி கைவிட்டது. ரிஷப் பண்ட்-ஐ கொண்டாட தொடங்கியது. எனவே அந்த அணியை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே ஸ்ரேயாஸ் சம்பளத்தை குறைத்து அகமதாபாத் அணிக்குள் சென்றுள்ளார்.

Story first published: Thursday, December 16, 2021, 20:18 [IST]
Other articles published on Dec 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+