Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"3 வடிவ அணிக்கும் ஒரே கேப்டன்" பிசிசிஐ எடுத்துள்ள திடீர் முடிவு? அமைதிகாக்கும் கோலி.. பின்னணி என்ன

அமீரகம்: இந்தியாவின் 3 வடிவ கிரிக்கெட் அணிக்கும் ஒரே கேப்டனை நியமிப்பது குறித்து பிசிசிஐ முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 3 வெற்றிகளை பெற்ற போதும், அரையிறுதிக்கு கூட செல்லாமல் வெளியேறிவிட்டது.

இதனையடுத்து கோலி அறிவித்தபடியே நேற்று நடைபெற்ற நமிபியா போட்டியுடன் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

பதவி விலகிய கோலி

பதவி விலகிய கோலி

இந்திய அணியின் 3 வடிவ கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்து வந்த விராட் கோலி லீக் போட்டிகளில் சிறப்பாக கேப்டன்சி செய்தாலும் நாக் அவுட் போட்டிகளில் ஏமாற்றி விடுகிறார். இதனால் அவரின் பாரத்தை குறைக்க டி20 அணிக்கு புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து தொடருடன் அவர் பதவியேற்றார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருநாள் அணி பதவி

ஒருநாள் அணி பதவி

இது ஒருபுறம் இருக்க கோலியிடம் இருந்து 50 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன்சி பதவியும் பறிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் சொதப்பலால் கோலி மீது பிசிசிஐ கடும் அதிருப்தியில் உள்ளது. அவரிடம் ஒருநாள் அணியையும் விட்டுவைக்க கூடாது என தேர்வுக்குழு அதிகாரிகள் யோசித்து வருகின்றனர்.

கோலிக்கு ஆப்பு

கோலிக்கு ஆப்பு

இந்நிலையில் மூத்த அதிகாரி ஒருவர் அதனை உறுதி செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 3 வடிவ கிரிக்கெட் அணிக்கும் 3 கேப்டன்கள் என்ற முறை இந்திய அணிக்கு சரிவராது. அது சிக்கலில் தான் கொண்டு போய் முடியும். ஒவ்வொரு தொடரின் போதும் முடிவுகளில் குழப்பம் ஏற்படும். ஒரே மாதிரியான சீரான ஐடியாக்கள் தான் அணிக்கு ஆரோக்கியம். எனவே ஒருநாள் கிரிக்கெட் அணி மற்றும் டி20 கிரிக்கெட் அணிக்கு ஒரே கேப்டன் நியமிக்கப்பட ஆலோசனை நடக்கிறது.

ரோகித் சர்மா

ரோகித் சர்மா

தற்போதைய சூழலை வைத்து பார்க்கும் போது, ரோகித் சர்மா தான் அதற்கான சிறந்த தேர்வாக இருப்பார் என நினைக்கிறேன். இதுகுறித்த இறுதிகட்ட முடிவை பிசிசிஐ தேர்வுக்குழு உறுப்பினர்கள் விரைவில் எடுப்பார்கள். இந்திய கிரிக்கெட்டிற்கு எது நல்லதோ, அதனை பொறுத்தே சில கடினமான முடிவுகள் எடுக்கப்படும் எனத்தெரிவித்துள்ளார். எனவே விரைவில் கோலியின் ஒருநாள் கேப்டன்சி பதவியும் பறிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, November 9, 2021, 18:25 [IST]
Other articles published on Nov 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+