Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-ல் இருந்து சுரேஷ் ரெய்னா ஓய்வு.. அடுத்தகட்ட திட்டம் இதுதான்.. சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி!

துபாய்: சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா குறித்து வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

IPL-லிருந்து Retire ஆகிறார் Raina! CSK-வுக்கு ஆட மாட்டார் | Aanee's Appeal | *Cricket

இந்திய கிரிக்கெட் அணியில் மிக முக்கிய் வீரராக ஜொலித்து வந்த சுரேஷ் ரெய்னா கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஐபிஎல் தொடரிலாவது இனி அவரை காண்போம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கும் கடந்தாண்டு ஏமாற்றமே மிஞ்சியது.

சிஎஸ்கேவின் நிலைமை

சிஎஸ்கேவின் நிலைமை

மெகா ஏலத்தின் போது 2வது சுற்றில் கூட சுரேஷ் ரெய்னாவை ஏலம் எடுப்பதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்வம் காட்டவில்லை. அவரின் ஃபார்ம் சரியில்லை எனக்கூறி மற்ற எந்த அணிகளும் அவரை வாங்காததால், கடந்த ஐபிஎல் போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்டு வந்தார். எனினும் சமீபத்தில் அவரின் பயிற்சி வீடியோ வெளியானதால் அடுத்தாண்டு ஐபிஎல்-ல் கம்பேக் கொடுப்பதற்காக தயாராகிறார் என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திடீர் அறிவிப்பு

திடீர் அறிவிப்பு

இந்நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது. அதாவது, ஐபிஎல் தொடர் உட்பட இந்தியாவின் அனைத்து உள்நாட்டு தொடர்களில் இருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், எனது முடிவை உத்தரபிரதேச வாரியத்திற்கும் பிசிசிஐ தலைமை செயலாளர் ஜெய் ஷாவுக்கும் தெரிவித்துவிட்டேன். தற்போது அயல்நாட்டு தொடர்களில் விளையாட எனக்கு முழு சுதந்திரமும் உள்ளது எனக் கூறினார்.

ஐபிஎல் விதிமுறை

ஐபிஎல் விதிமுறை

இந்தியாவில் இருந்து ஒரு வீரர் அயல்நாட்டு தொடர்களில் விளையாட வேண்டுமென்றால், இந்தியாவின் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் முழுமையாக ஓய்வு பெற வேண்டும். அந்தவகையில் சுரேஷ் ரெய்னா, இனி தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தின் தொடர்களில் விளையாடவுள்ளார்.

 ஐபிஎல் ரெக்கார்ட்கள்

ஐபிஎல் ரெக்கார்ட்கள்

ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய ஜாம்பவானாக ரெய்னா திகழ்கிறார். இதுவரை ஐபிஎல் தொடரில் 200 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரெய்னா 5,528 ரன்களை குவித்துள்ளார். இதில் 39 அரைசதங்களும் ஒரு சதமும் அடங்கும். ஐபிஎல் வரலாற்றில் அதிக ஸ்கோர் அடித்த வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, September 6, 2022, 12:33 [IST]
Other articles published on Sep 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+