Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பொறுமை இழந்த ராகுல் டிராவிட்.. டி20 உலகக்கோப்பையில் கே.எல்.ராகுல் இல்லை? நீக்கத்திற்கு காரணம் என்ன?

ட்ரினிடாட்: இந்தியாவின் டி20 உலகக்கோப்பை திட்டத்தில் இருந்து கே.எல்.ராகுல் ஒதுக்கப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

IND vs WI 1st T20 போட்டி தான் T20 World Cup ஒத்திகை? *Cricket

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது.

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஓய்வில் இருந்த முன்னணி வீரர்கள் அனைவருமே டி20 தொடருக்காக அணிக்கு திரும்பிவிட்டனர்.

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

இந்த அணியில் கே.எல்.ராகுலால் மட்டும் கலந்துக்கொள்ள முடியவில்லை. இந்திய அணி துணைக்கேப்டனான கே.எல்.ராகுலுக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஒருவார குவாரண்டைனுக்கு பின்னர் குணமடைந்த கே.எல்.ராகுல், இன்னும் முழு உடற்தகுதி பெறவில்லை, உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதால் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

முக்கிய தொடர்

முக்கிய தொடர்

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து மட்டுமல்ல, டி20 உலகக்கோப்பை அணியில் இருந்தும் கே.எல்.ராகுல் விலகும் சூழல் உருவாகியுள்ளது. இந்தாண்டு நவம்பர் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவிருக்கிறது. இதற்கு இந்திய அணி தயாராவதற்கு வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் ஆசியக்கோப்பை போட்டிகள் மட்டுமே உள்ளன. ஆனால் இந்தாண்டு இன்னும் ஒரு டி20 போட்டியில் கூட கே.எல்.ராகுல் விளையாடாமல் இருக்கிறார்.

21 போட்டிகள் தவறியது

21 போட்டிகள் தவறியது

2022ம் ஆண்டில் இதுவரை மட்டும் வெஸ்ட் இண்டீஸ் (2) , இலங்கை, தென்னாப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து என மொத்தம் 6 தொடர்களில் 21 டி20 போட்டிகளை கே.எல்.ராகுல் தவறவிட்டுள்ளார். முதலில் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்த அவருக்கு தற்போது தற்போது கொரோனா எமனாக வந்து நின்றுள்ளது.

அதிரடி நீக்கம்

அதிரடி நீக்கம்

கே.எல்.ராகுல் மீண்டும் வந்துவிடுவார் என்று காத்திருந்த ராகுல் டிராவிட் தற்போது பொறுமை இழந்துள்ளார். முழு உடற்தகுதி இல்லாததால் ஆசியக்கோப்பை தொடரிலும் விளையாடமாட்டார் எனத்தெரிகிறது. எனவே எந்தவித போட்டியிலும் விளையாடாமல் நேரடியாக அவரை டி20 உலகக்கோப்பைக்கு கொண்டு செல்ல டிராவிட் தயாராக இல்லை என்றும், அவரை திட்டத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Friday, July 29, 2022, 19:10 [IST]
Other articles published on Jul 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+