“ஸ்பெஷல் கோச் வேணும்.. இல்லைனா அவ்ளோதான்” அடம்பிடிக்கும் சீனியர் வீரர்.. இந்திய அணியில் புதிய புயல்
மும்பை: இந்திய அணியில் ஒரு வீரர் மட்டும் தனியாக ஸ்பெஷல் பவுலிங் பயிற்சியாளர் வேண்டும் என அடம்பிடிப்பதால் புதிய சர்ச்சைக் கிளம்பியுள்ளது.
இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியதில் தொடங்கிய சர்ச்சைகள் தற்போது தான் அமைதியாகியுள்ளன.
இந்திய அணியும் புதிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் புதிய மைல்கல்லை நோக்கி பயணித்து வருகிறது.

சாதனை படைத்த இந்தியா
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் என இரண்டையுமே வைட் வாஷ் செய்தது இந்திய அணி. இதனையடுத்து 6 வருடங்களுக்கு பிறகு டி20 தரவரிசைப்பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.

ஸ்பெஷல் கோச்
இந்நிலையில் இந்திய அணியில் சீனியர் வீரர் ஒருவர் தனிப்பட்ட முறையில் ஸ்பெஷல் பவுலிங் பயிற்சியாளர் வேண்டும் என அடம்பிடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் முன்னாள் வீரர் அஜித் அகர்கர் தான் பயிற்சியாளராக வேண்டும் என குறிப்பிட்டு கேட்பதாகவும் தெரிகிறது. இதனையடுத்து அந்த சீனியர் வீரர் யார் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

யார் அவர்
அந்தவரிசையில் ரோகித் சர்மா தான் கேட்டிருக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கேப்டன் அவர் தான், இருவருமே மும்பையை சேர்ந்தவர்கள். மற்றும் ஒரே கிரிக்கெட் அகாடமியில் இருந்து வந்தவர்கள் என்பதால் ரோகித் தான் கேட்டிருப்பார் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

கோலியாக இருக்கலாம்
மற்றொரு புறம் விராட் கோலி தான் என்ற தகவலும் வருகிறது. புதிதாக வந்துள்ள பயிற்சியாளர் குழுவுடன் கோலிக்கு ஒத்துவரவில்லை என்றும், இதனால் தனி கோச் கேட்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஏற்றார் போல தான் சமீப நாட்களாக விராட் கோலிக்கு ஆதரவான கருத்துக்களை அஜித் அகர்கரும் கூறி வருகிறார். இன்னும் சிலர் புவனேஷ்வர்குமாராக கூட இருக்கலாம் எனக்கூறுகின்றனர்.
Recommended Video

எச்சரிக்கும் வல்லுநர்கள்
இந்திய கிரிக்கெட்டில் இதுபோன்று தனி பயிற்சியாளர் சேர்ப்பது மிகப்பெரிய பிரச்சினைகளை உண்டாக்கக்கூடும். அதிகார மோதல்கள் வெடிக்கும் என்பதால் பரபரப்பு நிலவுகிறது. தற்போதுள்ள பவுலிங் பயிற்சியாளர் பராஸ் ம்ஹாம்ரே மீது பல விமர்சனங்கள் இருந்து வருகிறது. எனவே அவரை மாற்றுவதற்கான் ஆலோசனைகளும் நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications