Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சினுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது- கபில் அதிரடி!

டெல்லி: கபில்தேவ் ஒரு சிறந்த பயிற்சியாளராக திகழவில்லை, அவரது வேலையையும் சேர்த்து தான் பார்க்க வேண்டியிருந்தது என்று தனது சுயசரிதை புத்தகத்தில் சச்சின் டெண்டுல்கர் அலுத்துக் கொண்டது குறித்து பதிலளிக்க கிரிக்கெட் ஜாம்பவான், ஹரியானா சிங்கம் கபில்தேவ் மறுத்து விட்டார்.

இது சச்சின் கருத்து. இதற்குப் பதிலளிக்க முடியாது என்று கபில் தேவ் கூறியுள்ளார். இந்தியாவின் மிகச் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான, சச்சினின் குரு என்று கருதப்படும் கவாஸ்கரை விட மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்தியாவுக்காக ஆடிய கபில் தேவ் குறித்து சச்சின் தனது சுயசரிதை நூலில் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

ஆனால் இதற்குப் பதிலளிக்க மறுத்து விட்டார் கபில்தேவ். டெல்லியில் நடந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தபோது கபிலிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. ஆனால் நோ கமெண்ட்ஸ் என்று கூறி விட்டார் கபில்.

சச்சினின் கதை

சச்சினின் கதை

பிளேயிட் இட் மை வே என்ற பெயரில் தனது சுயசரிதை நூலை வெளியிட்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இந்த நூல் படு பரபரப்பாக விற்று வருகிறது. காரணம், சச்சின் பரபரப்பான பல புகார்களை புத்தகத்தில் குவித்து வைத்திருப்பதால்.

கபில் தேவ் மீது கடுப்பு

கபில் தேவ் மீது கடுப்பு

இந்தியாவின் மிகச் சிறந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான, இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்தவரான, பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் சீறும் சிங்கமாக திகழ்ந்தவரான, தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடாமல் அணிக்காக விளையாடியவருமான, இந்தியாவின் அருமையான கேப்டன்களில் ஒருவருமான கபில் தேவ் மீதும் இந்தப் புத்தகத்தில் பாய்ந்திருந்தார் சச்சின்.

பயிற்சியாளர் வேலை தெரியவில்லையாம்

பயிற்சியாளர் வேலை தெரியவில்லையாம்

கபில் தேவ் பயிற்சியாளராக இருந்தபோது கேப்டனாக இருந்தவர் சச்சின். ஆனால் சச்சினின் சொதப்பல் கேப்டன்ஷிப்பால் இந்திய அணி பெரிய பெரிய தோல்விகளைச் சந்தித்து வந்தது. ஆனால் கபில்தேவ் நல்ல பயிற்சியளராக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் சச்சின். கபிலுக்கு பயிற்சியாளர் வேலை சரியாக செய்யத் தெரியவில்லை. அவரது வேலையையும் நானே பார்க்க நேரிட்டது என்று கூறியுள்ளார் சச்சின்.

இது அவர் கருத்துங்க

இது அவர் கருத்துங்க

இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் கபிலிடம் கேட்டபோது, இது அவரது கருத்து. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். அனைவரது கருத்தையும் நான் மதிக்கிறேன்.

வாழ்த்துகள் சச்சின்!

வாழ்த்துகள் சச்சின்!

சச்சினின் அனைத்து முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி நிறுத்திக் கொண்டார் கபில்.

விளையாடினால் ஜெயிக்கலாம்

விளையாடினால் ஜெயிக்கலாம்

இந்தியா உலகக் கோப்பையை தக்க வைக்குமா என்ற கேள்விக்கு, இப்பவே அதைச் சொல்ல முடியாது. எனது நாட்டு வீரர்களுக்கு நான் வாழ்த்து கூறிக் கொள்கிறேன். நன்றாக ஆடினால், நல்ல கிரிக்கெட்டைக் கொடுத்தால் வெல்லலாம் என்றார் கபில்தேவ்.

Story first published: Thursday, November 13, 2014, 16:17 [IST]
Other articles published on Nov 13, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+