Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆப்பிரிக்காவில் உள்ள காண்டாமிருகக் குட்டிக்கு என் மகள் பெயரா? நெகிழ்ச்சியில் ரோஹித் சர்மா!

மும்பை : ஆப்பிரிக்க நாடான கென்யாவில், ஒரு மிருகங்கள் காப்பகத்தில் உள்ள காண்டாமிருகக் குட்டிக்கு ரோஹித் சர்மாவின் மகள் சமைரா சர்மா பெயரை சூட்டியுள்ளனர்.

இது குறித்து அறிந்த ரோஹித் சர்மா நெகிழ்ந்து போய், அதை பகிர்ந்து கொண்டார். தகுந்த வயதுடன் தன் மகளுடன் வந்து காண்டாமிருகக் குட்டியை பார்க்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

ரோஹித் சர்மாவிற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெண் குழந்தை பிறந்தது. அந்த மகிழ்ச்சியில் இருந்து இன்னும் முழுதாக மீளாத ரோஹித் சர்மா, கென்யாவில் இருந்து வந்துள்ள இந்த அன்பு மேலும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

காண்டாமிருக பாதுகாப்பு

காண்டாமிருக பாதுகாப்பு

சரி, எப்படி நடந்தது இது? கடந்த 2015இல் பீட்டா அமைப்பில் உள்ள ரோஹித் சர்மா மற்றும் அவரது மனைவி கென்யாவில் உள்ள காண்டாமிருக பாதுகாப்பு திட்டம் ஒன்றில் சேர்ந்து பங்களிப்பு செய்துள்ளனர்.

நினைவு

அதன் நினைவாக கென்யாவில் உள்ள அல் பெஜெட்டா காப்பகத்தில் உள்ள பெண் காண்டாமிருக குட்டிக்கு 2 மாதங்களே ஆனா ரோஹித் சர்மாவின் பெண் குழந்தை பெயரான "சமைரா சர்மா" என பெயர் சூட்டியுள்ளனர்.

ரோஹித் நெகிழ்ச்சி

ரோஹித் நெகிழ்ச்சி

இது குறித்து தனக்கு வந்த செய்தியை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ரோஹித் சர்மா, "இது நெகிழ்ச்சியாக உள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள காண்டாமிருகக் குட்டிக்கு எங்கள் இரண்டு மாத மகளின் பெயரை சூட்டி உள்ளனர் என்பதை நம்பவே முடியவில்லை. எங்கள் குட்டி மிருகக் காதலியை தக்க தருணத்தில் அழைத்து வருகிறோம்" எனக் கூறி நன்றி தெரிவித்துள்ளார்.

அழிவின் விளிம்பில்..

அழிவின் விளிம்பில்..

காண்டாமிருகங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. அவற்றை காக்க அவை வாழும் ஒவ்வொரு நாடும் பெரும் முயற்சி எடுத்து வருகின்றன. கென்யாவில் உள்ள காண்டாமிருக பாதுகாப்பிற்கு ரோஹித் உதவி இருக்கிறார் என்பதும், பதிலுக்கு அவர்கள் அவரின் மகள் பெயரை சூட்டி இருப்பதும் நெகிழ்ச்சியான விஷயம் தான்!

Story first published: Saturday, March 16, 2019, 16:37 [IST]
Other articles published on Mar 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+