போர்க்குணத்தை இழந்து விட்டது வெஸ்ட் இண்டீஸ்.. ரிச்சர்ட்சன் பாய்ச்சல்
வெல்லிங்டன், நியூசிலாந்து: மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி தனது போர்க்குணத்தை இழந்து விட்டது. போர் வீரர்களுக்குரிய குணத்தை, வேகத்தை, அம்சத்தை இழந்து விட்டனர் வீரர்கள். அதுவே அணியின் சமீபத்திய பெரும் சரிவுக்குக் காரணம் என்று அணி மேலாளரான முன்னாள் கேப்டன் ரிச்சி ரிச்சர்ட்சன் கூறியுள்ளார்.
உலகின் சிறந்த அணியாக திகழ வேண்டும் என்ற வெறி வீரர்களிடையே இல்லாமல் போய் வி்ட்டது. எந்தச் சூழலையும் சமாளிக்கக் கூடிய திறமை அவர்களிடையே தொலைந்து போயுள்ளது என்றும் அவர் சாடியுள்ளார்.
அதேசமயம், எல்லாத் தவறுகளுக்கும் வீரர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது. மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அமைப்பும் சரியில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக நியூசிலாந்தைச் சேர்ந்த ஒரு இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியிலிருந்து சில பகுதிகள்...

எப்போதும் தயார் நிலை வேண்டும்
களத்தில் இறங்கி விட்டால் எத்தகைய சூழலையும் சமாளிக்கக் கூடிய ஆயத்த நிலையில் வீரர்கள் எப்போதுமே இருக்க வேண்டும்.

எதிரிகள் பயப்பட வேண்டாமா
நாம் ஆடுவதைப் பார்த்து எதிராளிகள் பயப்பட வேண்டும். உஷாராக வேண்டும். அப்படிப்பட்ட இறுக்கமான நிலையை நமது செயல்பாடு மூலம் காட்ட வேண்டும்.

அது இல்லாட்டி எப்படி
ஆனால் எங்களது தற்போதைய வீரர்களிடம் அந்தக் குணம் இல்லை. இதுதான் அணியை பலவீனமாக்கியுள்ளது.

வீரர்கள் மட்டும் காரணமல்ல
ஆனால் எல்லாவற்றுக்கும் வீரர்களை மட்டும் குறை சொல்வது எளிதானதுதான். ஆனால், கிரிக்கெட் அமைப்பும் இப்போது சரியாக இல்லை. அங்கேயே தவறு ஆரம்பிக்கிறது. அதிலிருந்து மீண்டு வர வேண்டும்.

என்ன தேவையோ அதைச் செய்ய வேண்டும்
எங்களது வீரர்களிடம் நல்ல திறமை உள்ளது. ஆனால் அதை செயல்படுத்துவதில்தான் சுணங்கி விடுகின்றனர். அதைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.
ஆனால் கிரிக்கெட் வாரியம் அது எதையுமே செய்யாமல் இருப்பதாக குறை கூறினார் ரிச்சர்ட்சன்.


Click it and Unblock the Notifications