Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"அதை செஞ்சிருங்க.. இல்லைன்னா ஆபத்து" டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. பாண்டிங் அறிவுரை

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி மேற்கொள்ள வேண்டிய திட்டம் குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் அறிவுரை கூறியுள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் தற்போது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகின்றன. இதுவரை மோதிய மூன்று போட்டிகளில் இந்தியா இரண்டு வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது.

இதனை அடுத்து நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் ஒன்பதாம் தேதி
நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்தூரில் பெற்ற வெற்றி மூலம் இது உறுதியாகி உள்ளது. மறுபுறம் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் நான்காவது டெஸ்டில் வெற்றி பெற்றே தீர வேண்டும். இதற்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

பாண்டிங் அறிவுரை

பாண்டிங் அறிவுரை

இந்நிலையில் இந்திய அணிக்கு முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் அறிவுரை கூறியுள்ளார். அதில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்து மண்ணில் நடைபெறுகிறது. இங்கு இந்தியா சாதிக்க வேண்டும் என்றால் கே எல் ராகுல் மற்றும் கில் இருவருமே நிச்சயம் தேவை.

பின்னடைவு

பின்னடைவு

இங்கிலாந்து களங்களில் பந்து தொடக்கம் முதல் கடைசி வரை அதிக ஸ்விங் ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே. இதனை எதிர்கொள்வதற்கு சற்று அனுபவம் உள்ளவர்கள் கே. எல். ராகுல் மற்றும் கில். இவர்களில்லாமல் இந்திய அணி இங்கிலாந்து செல்வது பின்னடைவு ஆகும்.

எப்போது போட்டி

எப்போது போட்டி

அதே சமயம் இருவருமே பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும். கில் டாப் ஆர்டரிலும் ராகுல் மிடில் ஆர்டரிலும் களமிறங்கலாம் எனக் கூறியுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

Story first published: Tuesday, March 7, 2023, 16:17 [IST]
Other articles published on Mar 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+