Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் ஏபி டிவில்லியர்ஸ் இவர் தான்.. ரிக்கி பாண்டிங் பாராட்டு.. பேட்டிங் வரிசையில் டாப் 4 பேர்

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் வரிசையில் டாப் 4 வீரர்கள் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய அணியின் 31 வயதான சூரியகுமார் யாதவ் குறித்தும் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.

ஆசிய கோப்பையை இந்திய அணி தான் வெல்லும் என்று ரிக்கி பாண்டிங் ஏற்கனவே ஆருடம் கூறிய நிலையில், உலகக்கோப்பை டி20 தொடரில் இந்திய அணி செய்ய வேண்டியது குறித்தும் அவர் பேசியுள்ளார்.

சூரியகுமார் யாதவ்

சூரியகுமார் யாதவ்

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் ,இந்திய கிரிக்கெட் அணியின் ஏ பி டிவில்லியர்ஸ் போல் சூரியகுமார் யாதவ் செயல்படுவதாக பாராட்டியுள்ளார். ஏபி டிவில்லியர்ஸ் 360 டிகிரியில் ரன் குவிப்பார். அதேபோல் சூரிய குமார் யாதவும் ரன் அடிப்பதாக பாண்டிங் குறிப்பிட்டுள்ளார். சூரியகுமார் அடிக்கும் சில ஷாட்டுகள் எல்லாம் பிரமிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

ரசிகர்களுக்கு மகிழ்ச்சி

ரசிகர்களுக்கு மகிழ்ச்சி

சூரியகுமார் பேட்டிங் நிச்சயம் பந்துச்சாளர்களுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக இருப்பதாக அவர் கூறினார்.மேலும் சூரிய குமார் யாதவ் வேகபந்துவீச்சு, சுழற் பந்துவீச்சு என அனைத்தையும் அதிரடியாக எதிர் கொள்வதாகவும் பாண்டிங் பாராட்டினார்.டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சூரியகுமார் யாதவும் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என குறிப்பிட்ட பாண்டிங்,ஆஸ்திரேலிய ரசிகர்கள் சூரியக்குமாரின் ஆட்டத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள் என்று கூறினார்.

நம்பிக்கை மிகுந்த வீரர்

நம்பிக்கை மிகுந்த வீரர்

சூரியகுமார் யாதவ் நம்பிக்கை மிகுந்த வீரர் என்றும் அவருக்கு ஏதாவது சவாலை கொடுத்தால் அதை கண்டிப்பாக எதிர்கொள்ளும் திறமை அவருக்கு இருப்பதாகவும் பாண்டிங் பாராட்டினார். எந்த சூழ்நிலையிலும் சூரியகுமார் யாதவ் களத்துக்கு சென்றால் அணிக்கு வெற்றியை தேடி தருவார் என்றும் ரிக்கி பாண்டிங் கூறினார்.சூரியகுமார் யாதவும் பேட்டிங் வரிசையில் நம்பர் நான்காவது வீரராக களமிறங்க வேண்டும் அவருக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற பொறுப்பு சரிவராது.

டாப் 4 பேட்ஸ்மேன்கள்

டாப் 4 பேட்ஸ்மேன்கள்

என்னை பொறுத்தவரை விராட் கோலிக்கு நம்பர் 3 என்ற இடத்தை கொடுத்து விட வேண்டும். தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா கேஎல் ராகுல் இருப்பார்கள்.இதனால் இந்த நான்கு பேர் தான் டி20 உலக கோப்பையில் இந்திய அணியில் இருக்க வேண்டும் என்று பாண்டிங் கூறினார். சூரியகுமார் யாதவ் நடு வரிசையில் களமிறங்குவது மிகவும் முக்கியம்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

ஏனெனில் சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் 34 பந்துகளை எதிர்கொண்டு 88 ரன்களை அடித்துள்ளார்.அவருடைய ஸ்ட்ரைக் ரேட் ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் 258 என்ற அளவில் இருக்கிறது. 23 போட்டிகளில் விளையாடி 672 ரன்கள் விளாசி உள்ள சூரியகுமார் யாதவ் தற்போது டி20 தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இதனால் தான் அவரை டிவில்லியர்ஸ் உடன் ரிக்கி பாண்டிங் ஒப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, August 16, 2022, 18:46 [IST]
Other articles published on Aug 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+