Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன மாதிரி கேப்டன்சி இது.. ரோகித் வலையில் எலிபோல் சிக்கிய ஹெட்.. புகழ்ந்து தள்ளும் ரிக்கி பாண்டிங்!

லண்டன்: ஆஸ்திரேலியா அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மாவின் கேப்டன்சி அபாரமாக இருந்ததாக ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவின் அணித் தேர்வு, பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம், பந்துவீச்சாளர்களுக்கான திட்டம், பிட்ச் பற்றி கணிப்பு என்று கேப்டன்சி மோசமாக இருந்தது. இதனை முன்னாள் ஜாம்பவான்களான ரிக்கி பாண்டிங், ரவி சாஸ்திரி, கங்குலி உள்ளிட்டோர் வெளிப்படையாகவே காட்டமாக விமர்சித்தனர்.

Ricky Ponting praising Rohit Sharma Captaincy, When Jadeja got Travis Head wicket in the WTC Final

ஆனால் அந்த விமர்சனங்களுக்கு நேர் மாறாக இரண்டாவது இன்னிங்ஸில் ரோகித் சர்மா கேப்டன்சியை மேற்கொண்டு வருகிறார். உமேஷ் யாதவை சரியான நேரத்தில் அட்டாக்கில் கொண்டு கவாஜாவை வீழ்த்தியது, தேநீர் இடைவேளைக்கு பின் ஜடேஜாவிடம் பந்தை கொடுத்தது, டிராவிஸ் ஹெட்டிற்கு ஷார்ட் பால் திட்டத்திற்கான ஃபீல்டர்களை சரியான இடத்தில் பொருத்தியது, சுழற்பந்துவீச்சுக்கு ஹெட் கஷ்டப்படுகிறார் என்பதை அறிந்து ஜடேஜாவுக்கு தொடர்ந்து ஓவர்கள் கொடுத்தது என்று கேப்டனாக ரோகித் அசத்தினார்.

இதனை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார். இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேசுகையில், "ஜடேஜாவை வைத்து ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட்டை வீழ்த்திய ரோகித் சர்மாவின் திட்டம் மிகச்சரியானது. இதுதான் சிறந்த கேப்டன்சி" என்று பாராட்டியுள்ளார். அதேபோல் விராட் கோலியை பார்த்து ரோகித் சர்மா கேப்டன்சியை கற்றுக் கொள்ள வேண்டும் என்று கங்குலி அறிவுறுத்திருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் ரோகித் சர்மா தேவைக்கு ஏற்ப பந்துவீச்சாளர்களை மாற்றியதோடு, ஃபீல்டிங் திட்டமும் மிகச்சிறப்பாக இருந்தது என்று பாராட்டியுள்ளார்.

Ricky Ponting praising Rohit Sharma Captaincy, When Jadeja got Travis Head wicket in the WTC Final

அதேபோல் இந்திய அணிக்காக இலக்கு 370 ரன்களுக்குள் இருந்தால், நிச்சயம் ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்றும் கங்குலி கூறியுள்ளார். கடந்த முறை காபா மைதானத்தில் இந்திய அணி 328 ரன்கள் என்ற இலக்கை ஒரே நாளில் விரட்டி அசத்தியது. அதுமட்டுமல்லாமல் சேஸிங் என்று வந்துவிட்டால் இந்திய அணி வீரர்கள் வேறு மாதிரி மாறுவார்கள். இதனால் நான்காவது நாளின் முதல் செஷனிலேயே ஆஸ்திரேலிய அணியை ஆல் அவுட் செய்தால், இந்திய அணி வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, June 10, 2023, 10:37 [IST]
Other articles published on Jun 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+