வேலையை ஆரம்பி்த்தார் பான்டிங்....!
மும்பை: இதோ கைக்கு எட்டும் தூரத்தில் ஐபிஎல் போட்டிகள் வந்து விட்டன. அணிகளும் தயாராக ஆரம்பித்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் அணியினருக்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் தனது அணி வீரர்களுக்கான பயிற்சியை ரிக்கி பான்டிங் நடத்தி வருகிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு வீரராக இருந்தவர் பான்டிங். 2003, 2007 ஆகிய இரு உலகக் கோப்பைகளை தனது நாட்டுக்காக பெற்றுக் கொடுத்த சாதனையாளர். சிறந்த வீரரான ரிக்கி பான்டிங் தற்போது மும்பை அணியின் பயிற்சியாளராக மாறியுள்ளார்.

சில வீரர்கள் பயிற்சியில்
முதல் நாள் பயிற்சியின்போது பார்த்திவ் படேல் உள்ளிட்ட சில வீரர்கள் கலந்து கொண்டனர். மற்ற வீரர்கள் விரைவில் பயிற்சிக்குத் திரும்புவார்கள் என்று தெரிகிறது.

முதல் போட்டி கொல்கத்தாவுடன்
மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் ஏப்ரல் 8ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதவுள்ளது.

ரஞ்சி வீராதி வீரர்கள்
மும்பை அணியில் இடம் பெற்றுள்ள வேகப் பந்து வீச்சாளர்களான வினய்குமார், அபிமன்யூ மிதுன் ஆகியோர் ரிக்கி முன்னிலையில் பயிற்சியில் ஈடுபட்டனர்.

2 நாளில் வருகிறார் ரோஹித் சர்மா
ஆஸ்திரேலியா சென்று திரும்பியுள்ள ரோஹித் சர்மா இன்னும் 2 நாளில் வருவாராம். ஏப்ரல் 4ம் தேதி மொத்த அணியும் வந்து விடுமாம்.

கேப்டன் ரோஹித்
மும்பை இந்தியன்ஸ் அணியாக ரோஹித் சர்மா செயல்படவுள்ளார். அவர் தவிர இந்த அணியில் அபிமன்யூ மிதுன், ஆதித்யா தரே, அம்பட்டி ராயுடு, ஹர்பஜன் சிங், ஜஸ்பிரீத் பம்ரா, பார்த்திவ் படேல், பிரக்யான் ஓஜா, வினய் குமார், அக்சய் வக்ரே, ஹர்திக் பாண்ட்யா, ஜெகதீஷா சுசித், நிதிஷ் ராணா, பவன் சுயல், சித்தேஷ் லாட், ஷ்ரேயாஸ் கோபால், உன்முக்த் சந்த், ஆரோன் பின்ச், அய்டன் பிளிஸ்ஸார்ட், கோரி ஆண்டர்சன், ஜோஷ் ஹேஸல்வுட், கீரன் போலார்ட், லசித் மலிங்கா, லென்டில் சிம்மன்ஸ், மெர்ச்சன்ட் டி லாங்கே, மிட்சல் மெக்கல்லகலன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications