Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இந்த ஆதாரம் போதுமா”.. இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டன்.. ரோகித்திற்காக குரல் எழுப்பிய பாண்டிங்

மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட அனைத்து தகுதிகளும் இருப்பதாக ரிக்கிப்பாண்டிங் கூறியுள்ளார்.

டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் கேப்டன்சியில் இருந்து விலகிய விராட் கோலி திடீரென டெஸ்ட் கேப்டன்சியில் இருந்தும் விலகினார்.

இதனால் டெஸ்ட் அணிக்கு யாரை கேப்டனாக நியமிப்பது என்பது குறித்து முடிவெடுக்க முடியாமல் பிசிசிஐ குழப்பத்தில் உள்ளது.

ஏன் ரோகித் வேண்டாம்

ஏன் ரோகித் வேண்டாம்

கோலிக்கு அடுத்தபடியாக ரோகித் சர்மா முதன்மை தேர்வாக இருக்கலாம். ஆனால் அவருக்கு தசைப்பிடிப்பு பிரச்சினை இருப்பதால், டெஸ்ட் போன்ற நெடுந்தொடர்களில் அவர் தாக்குப்பிடிப்பது கடினம். மேலும் அவருக்கு வயதும் 35 நெருங்கிவிட்டதால், ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கக்கூடாது என கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாண்டிங் விளக்கம்

பாண்டிங் விளக்கம்

இந்நிலையில் அவர்களுக்கு ரிக்கிப்பாண்டிங் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக பதவியேற்ற போது நானும் அணியில் இருந்தேன். கேப்டனாக நான் தான் தேர்வு செய்யப்பட்டேன். ஆனால் என் ஃபார்ம் மோசமாக இருந்ததால், நேரடியாக இளம் வீரர் ரோகித் சர்மாவிடம் அணியை ஒப்படைத்தனர். அன்றில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

கேப்டன்சி சாதனை

கேப்டன்சி சாதனை

ஐபிஎல் தொடரில் எந்த ஒரு கேப்டனும் ரோகித் சர்மாவை போன்று 5 கோப்பைகளை வென்றுக்கொடுத்ததில்லை. இந்திய அணியையும் அவ்வபோது வழிநடத்தி வெற்றி கண்டுள்ளார். இதனை விட அவர் சிறப்பான கேப்டன்சி செய்வார் என்பதை நிரூபிக்க வேறு என்ன வேண்டும். அவரிடம் டெஸ்ட் அணியை ஒப்படைப்பது தான் சரி என பாண்டிங் கூறியுள்ளார்.

Recommended Video

India vs West Indies ODI.. அதீத நம்பிக்கையோடு இருக்கும் Pollard
இளம் வீரர்கள்

இளம் வீரர்கள்

இந்திய அணியில் ரோகித்திற்கு அடுத்தபடியாக கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் கேப்டன்சி பதவிக்கு உள்ளனர். இதில் கே.எல்.ராகுல் இந்திய அணியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் துணைக்கேப்டனாக இருக்கிறார். எனவே அவருக்கு தான் கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

Story first published: Monday, January 31, 2022, 17:14 [IST]
Other articles published on Jan 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+