Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் பிளவு...? கோலி, ரோகித் இடையே சண்டை...? வெளிவந்தது அந்த ரகசியம்

மும்பை: கோலி, ரோகித் சர்மா இடையே கருத்து வேறுபாடு இருக்கிறதா? இல்லையா என்பது குறித்து சுவாரசியமான புதிய தகவல் வெளியாகி உள்ளது.

உலக கோப்பை தொடரில் இந்தியா, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. இது குறித்து, அணி நிர்வாகத்திடம் பிசிசிஐ சரமாரி கேள்விகளை எழுப்பி இருக்கிறது. முக்கியமாக அணியில் சில மாற்றங்களை கொண்டு வரவும் பிசிசிஐ முடிவு செய்திருக்கிறது.

முதலாவதாக நடுவரிசை பேட்டிங், குறிப்பாக 4வது வீரர் யார் என்ற குழப்பத்துக்கு முடிவு கட்ட திட்டமிட்டுள்ளது. அதன்பின் தோனி இனி அணியில் தொடர்ந்து நீடிக்க மாட்டார் என்பதை அறிவிக்க இருக்கிறது. பின்னர் 15 பேர் கொண்ட அணியில் வைத்துக் கொண்டு, களத்தில் ஆடும் 11 பேரில் இருந்து கழற்றி விடவும் முடிவு செய்திருக்கிறது.

வருகிறது சீர்திருத்தம்

வருகிறது சீர்திருத்தம்

அணியில் சீர்திருத்தங்கள் என்ற பேச்சுகள் பலமாக அடிபடுவது ஒரு பக்கம் இருந்தாலும், கோலி, ரோகித் இடையே மறைமுகமான சண்டையும், கருத்து முரண்பாடும் இருப்பதாக பேச்சுகள் எழுந்தன. அது தொடர்பான செய்திகளும் அதிகளவு கசிந்தன.

உண்மையான தகவல்

உண்மையான தகவல்

இந் நிலையில், இதுகுறித்து உண்மையை தற்போது வெளியிட்டுள்ளார் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண். அவர் கூறியிருப்பதாவது: கோலி, ரோகித் இடையே பிளவு என பேச்சுக்கள் அடிபடலாம். ஆனால் பிசிசிஐ இதை ஒரு போதும் ஏற்காது.

சண்டை இல்லை

சண்டை இல்லை

யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கு உரிய பதவி வழங்கப்படும். இருவருக்கும் இடையே பிளவு இருப்பது முற்றிலும் உண்மை அல்ல. ஏனெனில், களத்தில் கோலி தடுமாறும்போது ரோகித், உடனடியாக சென்று ஆலோசனையை கூறியிருக்கிறார். இது அனைவருக்கும் தெரியும்.

நம்ப வேண்டாம்

நம்ப வேண்டாம்

இருவரும் நட்புடன்தான் இருக்கின்றனர். உலக கோப்பையில் ரோகித் சிறப்பாக செயல்பட்ட போது தாமாக முன் வந்து உற்சாகப்படுத்தியது கோலி தான். எனவே சண்டை என்பது வீண் வதந்தி, நம்ப வேண்டாம் என்றார்.

Story first published: Saturday, July 20, 2019, 22:30 [IST]
Other articles published on Jul 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+