Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் விரிசல்.. ரோகித்திடம் சண்டை போட்ட இசான் கிஷன்.. அணியை விட்டு விலகியதன் பின்னணி?

மும்பை : ரோகித் சர்மாவுக்கு இந்திய அணியின் கேப்டனாக இது போதாத காலமாக இருக்கிறது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதால் அந்த அணியில் அவருக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் பனிப்போர் ஏற்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்பட்டு இருக்கும் பிரச்சினை அவருடைய கவனத்தை பாதிக்க செய்திருக்கும் நிலையில் தற்போது இந்திய அணியாலும் ரோகித் சர்மாவுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

Rift between Rohit sharma and Ishan kishan is confirmed by reports

இதன் மூலம் ரோகித் சர்மா வீரர்களிடையே சரியாக நடந்து கொள்கிறாரா இல்லையா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியின் ஆஸ்தான விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியதை அடுத்து அவருடைய இடத்தில் இஷான் கிஷன் களம் இறங்கினார்.எனினும் இசான் கிஷனுக்கு நினைத்தபடி பல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனினும் கிடைத்த வாய்ப்பையும் அவர் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.

வெஸ்ட் இண்டீஸ் எதிரான டெஸ்ட் போட்டியில் கே எஸ் பரத்துக்கு பதிலாக இசான் கிஷனுக்கு தான் முன்னுரிமை வழங்கப்பட்டது. அதிலும் அவர் நன்றாக விளையாடினார். இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் திடீரென்று இசான் கிஷனுக்கு பதிலாக ஜித்தேஷ் சர்மா சேர்க்கப்பட்டது அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் தமக்கு மனதளவில் ஓய்வு தேவை என்று கூறி இசான் கிஷன் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து விலகி இருக்கிறார்.

இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு காரணம் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். டி20 அணியில் பொறுத்தவரை இசான் கிஷன் தொடக்க வீரராக இருக்கிறார். ஆனால் அணியில் ஏற்கனவே ஜெய்ஸ்வால் கில் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்த நிலையில் நடுவரிசையில் மட்டுமே விளையாட இடம் இருந்தது.

ஆனால் இஷான் கிஷனுக்கு அந்த இடம் சரி வராது என்பதால் அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டு ஜித்தேஷ் சர்மாவை இந்திய அணி நிர்வாகம் கொண்டு வந்தது. இந்த நிலையில் கேப்டனாக ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் திரும்பியவுடன் இந்த நிலை மாறும் என இசான் கிஷன் எதிர்பார்த்தார். ஆனால் ரோகித் சர்மா இது குறித்து கண்டு கொள்ளவில்லை. மேலும் இசான் கிஷனை எப்போதும் போல் விளையாட்டுக்காக திட்டியிருக்கிறார்.

இதனால் கடுப்பான இஷான் கிசம் தமக்கு இந்திய அணியில் தற்போது இடம் வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். அதுமட்டுமில்லாமல் தற்போது ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். ஏற்கனவே ரோகித் சர்மாவுக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டிருக்கும் நிலையில் ரோகித்தை வெறுப்பேற்றுவதற்காக இசான் கிஷன் மாறிவிட்டாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இஷான் கிசனுக்கு அவ்வளவு ஆதரவாக ரோகித் சர்மா பலமுறை நின்று இருக்கிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணி அதிக தொகை கொடுத்து இசான் கிஷனை தேர்வு செய்ததற்கு முக்கிய காரணமே ரோகித் சர்மா தான். இந்த நிலையில் ரோகித் சர்மாவின் நடவடிக்கையை சரியாக புரிந்து கொள்ளாமல் இஷான் கிஷன் அவர் மீது கோபமாக இருக்கிறார். இதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு இஷான் கிஷன் டெஸ்ட் போட்டிக்கு உடனடியாக திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Story first published: Thursday, February 8, 2024, 18:15 [IST]
Other articles published on Feb 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+