வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிளவு? கேப்டன் பொலார்டுக்கும், இளம் வீரருக்கும் மோதல்.. வாட்ஸ்ஆப்பில் சண்டை
பார்பிடாஸ்: மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியில் கேப்டன் பொலார்டுக்கும், இளம் வீரர் ஓடியன் ஸ்மித்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
இதனால் அணிக்குள் சீனியர்களுக்கும், ஜூனியர்களுக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இந்தியா தொடர் நடைபெறுவதற்கு முன்பு இந்த மோதல் நிகழ்ந்துள்ளது.
கடந்த வாரம் அயர்லாந்துடன் மேற்கிந்திய தீவுகள் அணி ஒருநாள் தொடரில் மோதியது. இதில் 2க்கு1 என்ற கணக்கில் அயர்லாந்து வென்றது

பொலார்ட் விமர்சனம்
இதனால் கடுப்பான கேப்டன் பொலார்ட் அணியில் உள்ள சக வீரர்களை கடுமையாக திட்டியுள்ளார். மேலும் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தான் தோற்றோம் என்றும், பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாட வேண்டும் என்று பேட்டி அளித்த பொலார்ட், அணியில் உள்ள இளம் வீரர்களையும் விமர்சித்துள்ளார்

வீரர்கள் எதிர்ப்பு
அயர்லாந்து தொடரில் மேற்கிந்திய திவுகள் அணி தோற்ற ஆட்டங்களில் பொலார்ட் 1 ரன் மற்றும் 3 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். இது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் பொலார்ட் தம் மீதுள்ள தவறை சுட்டிக்காட்டாமல், மற்ற வீரர்களை திட்டுவதாக அணியில் உள்ள இளம் வீரர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளனர்

வாட்ஸ் ஆப் ஆடியோ
இதனால் பொலார்டுக்கு மான பிரச்சினை ஏற்பட, இளம் வீரர் ஓடியன் ஸ்மித்தை கடுமையாக திட்டியுள்ளார். மேலும் அவரை தகாத முறையில் பொலார்ட் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. இளம் வீரரை திட்டி பொலார்ட் வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய ஆடியோவும் தற்போது வெளிவந்துள்ளது. இதனால் அணியில் பிளவு ஏற்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது

விளக்கம்
இதனிடையே, இந்த பிரச்சினை குறித்து விளக்கம் அளித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம், அணியில் வீரர்களிடையே எவ்வித மோதலும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளனர். அணியில் பிளவை ஏற்படுத்த ஊடகங்களே முயற்சி செய்வதாகவும், தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி , இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்படுவதாகவும் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications