Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சின்ன தல கிடைச்சிட்டாருங்க.. சீக்கிரம் இந்திய அணியில் ரெய்னாவுக்கு பதில் கொண்டு வாங்க.. வேற லெவல்

பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மூலம் இந்திய அணிக்கு பல ஜாம்பவான்களும், சாம்பியன்களும் கிடைத்துள்ளனர். ஐபிஎல் தொடருக்கு முன்பே இந்திய அணிக்குள் ரெய்னா வந்தாலும், உள்ளே வெளியே என்று இருந்தார்.

ஆனால் சிஎஸ்கேவில் ரெய்னா தனது திறமையை நிரூபித்த பிறகு தான் இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைத்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு தோனியுடன் சேர்ந்த ரெய்னா நல்ல பினிஷராக விளங்கினார். ஆனால் தோனியும், ரெய்னாவும் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணிக்கு பினிஷர்கள் கிடைக்கவில்லை.

Rinku singh might be the contender for the replacement for suresh raina

தற்போது உலக கோப்பை நடைபெறும் நிலையில் கூட , பினிஷர் ரோலில் அணிக்கு யார் இருப்பார் என்று தெரியவில்லை. இதனால் ரெய்னா போல், ஒரு வீரரை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. தற்போது அந்த இடத்திற்கு தகுதியான நபராக ரிங்கு சிங் திகழ்கிறார்.

குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் தொடர்ந்து 5 சிக்சர் விளாசியது எல்லாம் வேற லெவல் ஆட்டம். நடப்பு சீசனில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு, 5 இன்னிங்சில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். ஆர்சிபிக்கு எதிராக 33 பந்துகளில் 46 ரன்கள், குஜராத்துக்கு எதிராக 21 பந்தில் 48 ரன்கள், ஐதராபாத்துக்கு எதிராக 31 பந்தில் 58 ரன்களும் அடித்தார்.

இதே போன்று சிஎஸ்கேக்கு எதிராக 33 பந்தில் 53 ரன்களும், ஆர்சிபிக்கு எதிராக 10 பந்தில் 18 ரன்களும் அடித்தனர். இதன் மூலம் ரிங்கு சிங், நெருக்கடியான கட்டத்தில் சிறப்பாக விளையாடுகிறார் என்று தெரிகிறது. இதனால் எதிர் காலத்தில் ரெய்னா இடத்திற்கு ரிங்கு சிங் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, April 26, 2023, 23:55 [IST]
Other articles published on Apr 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+