Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4x100மீ தொடர் ஓட்டத்திலும் வெற்றி... 9-வது தங்கம் வென்று அசத்திய உசேன் போல்ட்

ரியோ: ரியோ ஒலிம்பிக்ஸ் 4x100மீ தொடர் ஓட்டத்திலும் உசேன் போல்ட் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

29 வயதாகும் உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக்ஸில் 4x100மீ தொடர் ஓட்டத்திலும் தங்கம் வென்றுள்ளார். ஓட்டுமொத்தமாக அவர் பெறும் 9-வது தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Bolt

கடந்த இரண்டு ஒலிம்பிக்ஸிலும் 100மீ, 200மீ ஓட்டம் மற்றும் 4x100மீ தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கம் வென்றிருந்தார் உசேன் போல்ட்.

இந்நிலையில், ரியோ ஒலிம்பிக்ஸிலும் இந்த பிரிவுகளில் பங்கேற்று ஹாட்ரிக் அடிக்கும் நேக்கத்தில் களம் இறங்கிய உசேன் போல்ட்டுக்கு வெற்றி முகம் தான்.

ரியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற உசேன் போல்ட் 100மீ, 200மீ ஓட்டத்தில் தங்கம் வென்று இரண்டு பிரிவுகளிலுமே ஹாட்ரிக் தங்கத்துடன் சாதனை படைத்தார். இந்நிலையில், 4x100மீ தொடர் ஓட்டத்திலும் அவருக்கு தங்கம் கிடைத்துள்ளது,

4x100மீ தொடர் ஓட்டத்தில் ஜமைக்கா 37.27 வினாடிகளில் இலக்கை எட்டியது. 37.60 வினாடிகளில் இலக்கை கடந்த ஜப்பான் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது. 37.64 வினாடிகளில் இலக்கை எட்டிய கனடா 3-வது இடதை பிடித்து வெண்கலம் வென்றது.

Story first published: Saturday, August 20, 2016, 9:43 [IST]
Other articles published on Aug 20, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+