Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தண்ணீர் குடிக்க கூட முடியவில்லை.. காயமடைந்த கையோடு போராடிய பண்ட்.. களத்தில் நடந்த அந்த சம்பவம்!

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கீப்பர் ரிஷாப் பண்ட் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

அதன்பின் முதல் இன்னிங்சில் ஆடிய இந்திய அணி வெறும் 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 312 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தற்போது ஆஸ்திரேலியா ஸ்கோரை எடுக்க முயன்று இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

ரோஹித்

ரோஹித்

நேற்று இந்திய அணியின் பேட்டிங் பார்த்து, இன்று இந்திய அணி கண்டிப்பாக விக்கெட்டுகளை இழந்து விடும் என்றுதான் பலரும் எதிர்பார்த்தனர். அதேபோல் இன்று ரஹானேவும் வெறும் 4 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் அவுட் ஆனார். ஆனால் அதன்பின் இன்று களமிறங்கியதில் இருந்தே பண்ட் அதிரடியாக ஆடினார்.

அதிரடி

அதிரடி

ஒரு பக்கம் பண்ட் அதிரடியாக பேட்டிங் செய்ய இன்னொரு பக்கம் புஜாரா நிதானமாக ஆடினார். இவர்கள் இருவரும் மாறி மாறி ஆடுவதை ஆஸ்திரேலியா பவுலர்கள் எதிர்கொள்ள முடியாமல் திணறினார்கள். கடைசி நாள் ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் பொதுவாக டிபன்ஸ் ஆட்டம் ஆடுவார்கள்.

ஆனால்

ஆனால்

ஆனால் பண்ட் தொடக்கத்தில் இருந்து அடித்து ஆடினார். அதிலும் லைன் உள்ளிட்ட ஸ்பின் பவுலர்கள் பந்தில் 6, 4 எல்லாம் அடித்து பண்ட் வெளுத்து கட்டினார். இந்தியா பொறுமையாக ஆடும் என்று நினைத்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு பண்ட் அதிர்ச்சி கொடுத்தார். அதிலும் இவர் லைன் பவுலிங்கில் அடித்த பவுண்டரிகள் ஆஸ்திரேலியாவின் பிரஷரை அதிகரித்தது.

காயம்

காயம்

பண்ட் காயம் காரணமாக கஷ்டப்பட்டு வருகிறார். இவருக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயத்தோடு இவர் பேட்டிங் செய்தார். அதிலும் இவர் தண்ணீர் குடிக்க கூட கஷ்டப்பட்டார். இடைவெளியின் போது மற்ற வீரர்கள்தான் இவருக்கு தண்ணீர் கொடுத்தனர்.

காயத்தோடு போராட்டம்

காயத்தோடு போராட்டம்

காயத்தோடு போராடிய பண்ட் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பெரிய அளவில் அழுத்தம் கொடுத்தார். இந்த நிலையில் சதம் அடித்து பண்ட் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 97 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஆனாலும் பண்டின் அதிரடியான ஆட்டத்தை பலரும் பாராட்ட தொடங்கி உள்ளனர்.

Story first published: Monday, January 11, 2021, 9:02 [IST]
Other articles published on Jan 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+