Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பந்த் இன்னும் 10 வருஷம் ஆடுவாரு.ஆனா இவரு ஆடுறது கேள்விக்குறிதான்.முன்னாள் தேர்வாளர் சொல்லியிருக்காரு

டெல்லி : டெஸ்ட் போட்டிகளில் இன்னும் 10 ஆண்டுகளுக்கு ரிஷப் பந்த் விளையாடுவார் என்று முன்னாள் தேர்வாளர் ஷரன்தீப் சிங் உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஆனால் விரித்திமான் சாஹா விளையாடுவது கேள்விக்குறிதான் என்றும் ஷரன்தீப் தெரிவித்துள்ளார்.

ரிஷப் பந்த் தன்னுடைய ஷாட் தேர்வு, பிட்னஸ் உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டத்தை மேம்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான பங்களிப்பு

சிறப்பான பங்களிப்பு

இந்தியா -இங்கிலாந்து தொடரில் மட்டுமின்றி, முன்னதாக ஆஸ்திரேலிய தொடரிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த். கடந்த ஆண்டுகளில் சொதப்பலான ஆட்டத்தை அளித்து கடுமையான விமர்சனங்களுக்கு ஆளான இவரது ஆட்டம் கடந்த 6 மாதங்களில் மிகச்சிறப்பாக மாறியுள்ளது.

தொடர்ந்து ஏறுமுகம்

தொடர்ந்து ஏறுமுகம்

ரிஷப் பந்த் என்றாலே அதிரடிதான் என்ற வகையில் இவரது ஆட்டம் மாறியுள்ளது. கடந்த ஆஸ்திலியாவிற்கு எதிரான பிங்க் பால் போட்டியில் சாஹா இடம்பெற்றிருந்தார். ஆனால் அடுத்த போட்டிகளில் களமிறங்கிய பந்த்திற்கு அதுமுதல் எல்லாமே ஏறுமுகமாக அமைந்தது.

முன்னாள் தேர்வாளர் பாராட்டு

முன்னாள் தேர்வாளர் பாராட்டு

இந்நிலையில் கடந்த ஆண்டுகளை போல அல்லாமல் ரிஷப் பந்த்தின் ஷாட் செலக்ஷன் மற்றும் பிட்னஸ் பிரச்சினைகளில் சிறப்பாக செய்லபட்டு தற்போது தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருவதாக முன்னாள் இந்திய தேர்வாளர் ஷரன்தீப் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் மிகசிறந்த பேட்ஸ்மேனாக உருவாகியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்

டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்

மேலும் பந்த் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடுவார் என்றும் ஆனால் விரித்திமான் சாஹா விளையாடுவது கேள்விக்குறிதான் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். ரிஷப் பந்த்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்டத்தில் வெளிப்படுகிறது

ஆட்டத்தில் வெளிப்படுகிறது

21 வயதான பந்த்திடம் 30 வயது வீரரின் ஆட்டத்தை எதிர்பார்ப்பது கடினம் தான் என்றும் ஆனால் அவர் அதை செயல்படுத்தி வருவதாகவும் ஷரன்தீப் சிங் மேலும் கூறியுள்ளார். தன்னுடைய அனுபவங்களால் பாண்டியா சிறப்பாக விளையாடி வருவதாகவும் அந்த ஆட்டத்தை தற்போது ரிஷப்பிடம் பார்க்க முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, March 31, 2021, 13:20 [IST]
Other articles published on Mar 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+