Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரிஷப் பண்ட்க்கு விபரீத ராஜயோகம்.. பண்ட் ராசி என்ன சொல்கிறது? கேப்டனாக ஜொலிப்பாரா..? வரலாறு என்ன?

டெல்லி: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அது எதிர்பாராத வகையில் அடிச்ச லக்.

இது ரிஷப் பண்ட்க்கு முதல் முறையாக நடந்தது இல்லை. அவருக்கு ஏற்கனவே இது போன்ற பல லக் அடித்திருக்கிறது.

இதனை தான் விபரீத ராஜயோகம் என்று சொல்வார்கள். வேறு யாருக்காவது ஏதாவது நிகழ்ந்தால், அதன் மூலம் பெரிய லக் அடிப்பதை இப்படி சொல்வது உண்டு.

ரஞ்சி கேப்டன் பதவி

ரஞ்சி கேப்டன் பதவி

ரிஷப் பண்ட் அண்டர் 19 கிரிக்கெட்டில் துணை கேப்டனாக இருந்த போதே தனது அதிரடி பேட்டிங் மூலம் பிரபலமானார். அதன் பிறகு டெல்லி ரஞ்சி அணியில் ரிஷப் பண்ட்க்கு இடம் கிடைத்தது. அப்போது கம்பீர் திடீரென்று கிரிக்கெட்டை விட்டு சென்ற நிலையில், அவர் வகித்த கேப்டன் பொறப்பு ரிஷப் பண்டிடம் வந்தது.

ஐபிஎல் கேப்டன் பதவி

ஐபிஎல் கேப்டன் பதவி

அதன் பிறகு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காக சாதாரண வீரராக விளையாடி கொண்டு இருந்தார். அப்போது கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து கேப்டன் பதவிக்கு பண்ட் வந்தார், ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பவும், கேப்டன் பொறுப்பு அவருக்கு தரப்படாமல், பண்ட்டையே தொடர்ந்து செயல்பட கூறியது டெல்லி அணி.

இந்திய அணி கேப்டன்

இந்திய அணி கேப்டன்

இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். தற்போது தென்னாப்பிரிக்க தொடரில் கூட கேஎல் ராகுல் தான் கேப்டனாக இருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் அவருக்கு காயம் ஏற்பட்டு, தொடரை விட்டு விலகியதால் மீண்டும் இந்திய அணி கேப்டன் பொறுப்பு ரிஷப் பண்டை தேடி வந்துள்ளது. இதில் பண்ட் சிறப்பாக செயல்பட்டால், ரோகித் சர்மாவுக்கு பிறகு அடுத்த கேப்டன் ரிஷப் பண்ட் தான்.

ரிஷப் பண்ட் ராசி

ரிஷப் பண்ட் ராசி

ரிஷப் பண்ட்க்கு துலாம் ராசியாம். துலாமில் பிறந்தவர்களுக்கு குரு 6 மற்றும் மூன்றாம் வீட்டிற்கு உடையவர். ஆறுக்குடைய குரு ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். இதனால் தான் ரிஷப் பண்ட்க்கு கேப்டன் பொறுப்பு தேடி வருகிறது என்று ஜோதிடர்கள் நம்புகின்றனர். ஏனெனில் டெல்லி அணி கேப்டனாக இருந்த பண்ட், அதில் கூட சிறப்பாக செயல்படவில்லை, அப்படி இருக்க தற்போது இந்திய அணியின் கேப்டனாகி விட்டார். எது எப்பயோ, கடின உழைப்புக்கு எப்போதும் மரியாதை தானே வந்து சேரும்.

Story first published: Thursday, June 9, 2022, 17:58 [IST]
Other articles published on Jun 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+