எதிர்பார்க்காத டிவிஸ்ட் வைத்த டிராவிட்.. இது வேற லெவல் ஆச்சரியம்.. கில்கிறிஸ்ட் போல் மாறும் பண்ட்
பிர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸை இழந்த இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
இதில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பிளேயிங் லெவனில் கோலி, ஜடேஜா, ரிஷப் பண்ட் மற்றும் பும்ரா ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.
இதனால், கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தீபக் ஹூடா, இஷான் கிஷன், ஆர்ஸ்தீப் சிங் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

தொடக்க வீரர்
முதலில் இந்திய அணி வெளியிட்ட டீம் ஷிட்டில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டது.ஏற்கனவே விராட் கோலி, ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கிய அனுபவம் உள்ளவர். இதனால் கோலிக்கு இது புதுசு அல்ல என்று ரசிகர்களும் எதிர்பார்த்தனர்.

டிராவிட் டிவிஸ்ட்
ஆனால், களத்துக்கு வரும் போது தான் பெரிய டிவிஸ்ட்டே வைத்தார் ராகுல் டிராவிட். தொடக்க வீரராக ரோகித் சர்மாவுடன் முதல் முறையாக ரிஷப் பண்ட் களமிறங்கினார். ரிஷப் பண்ட் அண்டர் 19 கிரிக்கெட்டில் ஏற்கனவே தொடக்க வீரராக களமிறங்கிய அனுபவம் உள்ளது. ஏற்கனவே நடுவரிசையில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜடேஜ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.

கில்கிறிஸ்ட் வழியில் பண்ட்
இதனால், ரிஷப் பண்டையும் நடுவரிசையில் களமிறக்குவது சரியாக இருக்காது. இதனால் பண்டை தொடக்க வீரராக களமிறக்கி டிராவிட், ரோகித் மாஸ்டர் ஸ்டோர்க் வைத்துள்ளனர். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் கில்கிறிஸ்ட் போல் நடுவரிசையில் களமிறங்கி அதிரடி காட்டும் ரிஷப் பண்டை, தொடக்க வீரராக டி20, ஒருநாள் போட்டியில் களமிறக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் ஏற்கனவே வலியுறுத்தினர்.

அதிரடி ஆட்டம்
இந்த நிலையில், இன்று தொடக்க வீரராக விளையாடிய ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 15 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட பண்ட், 4 பவுண்டரி மற்றும் 1 இமாலய சிக்சரை ரிஷப் பண்ட் விளாசினார். இதன் மூலம் பவர்பிளேவில் இந்திய அணி 61 ரன்களை குவித்தது. தற்போது கேஎல் ராகுல் இல்லாத நிலையில், அதற்குள் பண்ட் தனது திறமையை வெளிப்படுத்தினால், அவருக்கு இந்த இடம் சொந்தமாகிவிடும்.


Click it and Unblock the Notifications