Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது நம்ம ஊர் கில்கிறிஸ்ட்..! ஒரே ஓவரில் 22 ரன்கள்..! ரிஷப் பண்ட் அதிரடி.. தொடர்ந்து மிஸ்ஸாகும் சதம்

மொஹாலி: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்களை எடுத்துள்ளது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் போல் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடியதாக டிகரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

ராக்கெட் வேகம்

ராக்கெட் வேகம்

முதலில் ரிஷப் பண்ட் நிதானமாக விளையாடி, அடிக்க வேண்டிய பந்தை மட்டும் ரன்களை குவித்தார். குறிப்பாக ரிஷப் பண்ட் அரைசதம் கடந்ததும் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் போல் ரன்களை குவிக்க தொடங்கினார். 75 பந்துகளில் அரைசதம் அடித்த ரிஷப் பண்ட், அடுத்த 8 பந்துகளில் 32 ரன்கள் விளாச, ஸ்கோர் ராக்கெட் வேகத்துக்கு உயர்ந்தது.

சிக்சர்

சிக்சர்

இலங்கை வீரர் லசித் எம்புல்தேனியா வீசிய ஒரு ஓவரில் ரிஷப் பண்ட் டி20 கிரிக்கெட் போல் விளையாட ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். முதல் பந்தில் இறங்கி வந்து நேராக சிக்ஸ் அடிக்க, இலங்கை வீரர்கள் அனைத்து வீரர்களையும் பவுண்டரி லைனில் நிற்க வைத்தனர். இதனால் ரிஷப் சிங்கிள்ஸ் அடிப்பார் என இலங்கை வீரர்கள் எதிர்பார்த்தனர்.

22 ரன்கள்

22 ரன்கள்

ஆனால், அடுத்த பந்தையும் ரிஷப் பண்ட் தூக்கி நேராக சிக்ஸ் அடித்து அசத்தினார். இதே போன்று அடுத்த பந்தை பவுண்டரிக்கு ரிஷப் பண்ட் விரட்டினார். 4வது பந்து டாட் பாலாக, 5வது பந்தில் ஒரு டபுள்ஸ் மற்றும் கடைசி பந்தில் பவுண்டரி அடிக்க ஒரே ஓவரில் 22 ரன்கள் அடித்தால் ரிஷப் பண்ட்.

90 களில் ஆட்டமிழப்பு

90 களில் ஆட்டமிழப்பு

சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4 ரன்களில் சதத்தை மிஸ் செய்தார். இதன் முலம் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட்களில் 4 முறை 90 களில் அவுட்டாகி, ரிஷப் பண்ட் சதத்தை மிஸ் செய்துள்ளார். தோனி 144 இன்னிங்ஸ் விளையாடி 5 முறை 90களில் ஆட்டமிழந்தார். ஆனால் ரிஷப் பண்ட் 49 இன்னிங்சில் 5 முறை 90களில் ஆட்டமிழந்துள்ளார் ரிஷப் பண்ட்.

Story first published: Friday, March 4, 2022, 20:34 [IST]
Other articles published on Mar 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+