
சிறப்பான தொடக்கம்
அதை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடி 432 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஜோ ரூட் சதம் அடித்தார். 3 வருடங்களுக்கு பிறகு இந்த போட்டியில் பங்கேற்ற டேவிட் மலான் 70 ரன்கள் அடித்து அசத்தினார்.

சர்ச்சை காரியம்
இந்நிலையில் ரிஷப் பண்ட் செய்த ஒரு காரியம் பரபரப்பை கிளப்பியுள்ளது. முதல் இன்னிங்ஸில் டேவிட் மலான் அடித்த பந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சாதூர்யமாக கேட்ச் பிடித்திருந்தார். அவர் பிடித்த கேட்ச் தான் இந்த மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. கேட்ச் பிடித்த போது ரிஷப் பண்ட் கீப்பிங் க்ளவுசில் நடு விரல் மற்றும் ஆள்காட்டி விரலை சேர்த்து வைத்து டேப் போட்டு ஒட்டியிருந்தார்.

ரீப்ளே கேட்ட நடுவர்கள்
இதனை கவனித்த கள நடுவர்கள் மீண்டும் ரீப்ளே போட்டு காட்டச் சொல்லி, கேட்டிருந்தனர். அந்த ரீப்ளேவில் பண்ட் வழக்கத்திற்கு மாறாக தனது கீப்பிங் கிளவுசில் விரல்களை சேர்த்து வைத்து டேப் ஒட்டியிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கள நடுவர்கள் உடனடியாக கேப்டன் கோலியிடம் சென்று விக்கெட் கீப்பர் பண்ட் கிளவுஸில் இருக்கும் டேப்பை உடனடியாக அகற்ற கூறினர்.

திடீர் பரபரப்பு
இதனால் விராட் கோலி, நடுவர்கள், ரிஷப் பண்ட் ஆகியோருக்குள் சிறிது நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியில் ரிஷப் பண்ட் டேப்பை அகற்றினார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முன்னர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும் இதே போன்று கிளவுசில் டேப் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications