For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது தோனியின் ஸ்டைல் ஆச்சே.. இங்கி, டெஸ்டில் ரிஷப் பண்ட் அடித்த காப்பி.. அவரே கூறிய உண்மை - விவரம்!!

எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட், தோனியின் ஸ்டைலில் செய்த ஒரு விஷயம் கவனம் பெற்றுள்ளது.

இரு அணிகளும் மோதும் 5வது டெஸ்ட் போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி தொடக்கத்திலேயே சரிந்தது.

இந்தியா தடுமாற்றம்

இந்தியா தடுமாற்றம்

ஓப்பனிங் வீரர்கள் சுப்மன் கில் (17), புஜாரா (13) என அவுட்டாகி வெளியேறினார். இதன்பின்னர் வந்த ஹனுமா விஹாரி (20) ரன்களுக்கும் ,விராட் கோலி (11 ) ரன்களுக்கும் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் இந்திய அணி 98 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால் இதே அணியை 320 - 6 ரன்களாக மாற்றினர் ரிஷப் பண்ட்- ஜடேஜா ஜோடி.

அதிரடி காட்டிய பண்ட்

அதிரடி காட்டிய பண்ட்

அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட், இங்கிலாந்து பவுலிங்கை பொளந்துக் கட்டினார். 111 பந்துகளை சந்தித்த் பண்ட் 20 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 146 ரன்களை சேர்த்தார். இதன் மூலம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் 120 ஆண்டுக்கால சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார்.

ரிஷப் பண்ட் விளக்கம்

ரிஷப் பண்ட் விளக்கம்

இந்நிலையில் தனது பேட்டிங் குறித்து பேசிய பண்ட், தோனியை பின்பற்றினார். அதில், அதுபோன்ற சூழலில் பார்ட்னர்ஷிப்பை வளர்ப்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதே சமயம் முடிவை மட்டுமே எதிர்நோக்கி ஆடினால், அந்த முடிவு கிடைக்கவே கிடைக்காது. எனவே நான் ஆட்டம் மற்றும் செயலில் மட்டுமே கவனம் செலுத்துவேன். அப்போது தானாக நல்ல முடிவு நமக்கு கிடைத்துவிடும் என பண்ட் கூறினார்.

தோனி ஸ்டைல்

தோனி ஸ்டைல்

இதே வார்த்தைகளை தான் இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனி அடிக்கடி கூறுவார். எப்போதும் ரிசல்ட்டை எதிர்நோக்கி ஆடவே கூடாது. எப்போதுமே செயல்முறையில் மட்டுமே நான் கவனம் செலுத்துவேன் எனக்கூறுவார். இதே போன்று தான் பல வெற்றிகளை அவர் பெற்றுக்கொடுத்துள்ளார். தற்போது அந்த மந்திரத்தையே ரிஷப் பண்ட் கூறியது மட்டுமின்றி செய்தும் காட்டியுள்ளார்.

என்னதான் திட்டம்

என்னதான் திட்டம்

இதுகுறித்து பேசிய அவர், ஆட்டத்தில் அழுத்தம் அதிகம் இருந்தது தான். ஆனால் நான் எதையும் பொருட்படுத்தாமல் பந்தை மட்டுமே கவனித்து ஆடினேன். எதிரணி பவுலர்கள் என்ன செய்வார்கள் என சிந்திக்கவில்லை. நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை மட்டுமே செய்தேன் என கூறியது, ரசிகர்களுக்கு தோனியை நினைவுக்கூர்ந்தது.

Story first published: Saturday, July 2, 2022, 17:27 [IST]
Other articles published on Jul 2, 2022
English summary
Rishabh pant batting in India vs england test ( இந்தியா vs இங்கிலாந்து 5வது டெஸ்ட் ) இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் தோனியின் ஸ்டைலை ரிஷப் பண்ட் செய்தது தெரியவந்துள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+