“அவர கட்டிப்பிடிங்க” சூர்யகுமாரிடம் ரோகித் மனைவி கேட்ட க்யூட் கோரிக்கை.. லைக்ஸை வீசும் ரசிகர்கள்!
பெங்களூரு: சூர்யகுமார் யாதவிடம் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா வைத்த கோரிக்கை இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பங்கேற்று வரும் நிலையில் அணி கேப்டன் ரோகித் சர்மா மட்டும் அதில் பங்கேற்கவில்லை.
காலில் ஏற்படும் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வரும் ரோகித் சர்மா டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர் என இரண்டில் இருந்து விலகினார்.

ரோகித்தின் உடல்நிலை
இதனையடுத்து ரோகித் சர்மா தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடற்தகுதியை மேம்படுத்த தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அங்கு நடத்தப்படும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ரோகித்தால் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைய முடியும். இதனால் இலங்கை தொடருக்கு முன் முழுமையாக குணமடையும் முணைப்புடன் இருக்கிறார்.

கடும் பயிற்சி
தேசிய அகாடமியில் உள்ளதால் ரோகித் சர்மாவின் குடும்பத்தினர் அவருடன் தங்கியிருக்க முடியாது. சுமார் 25 நாட்களாக தனது மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து பயிற்சி ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தான் ரோகித்தை அவரது மனைவி ரித்திகா எவ்வளவு மிஸ் செய்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

ரித்திகா கோரிக்கை
பயிற்சியில் இருந்த ரோகித் சர்மாவுடன் சக வீரரான சூர்யகுமார் யாதவ் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். இதற்கு கமெண்ட் செய்திருந்த ரித்திக்கா " எனது கணவரை என் சார்பில் ஒருமுறை கட்டி அணையுங்க" எனக்கோரியுள்ளார். இதற்கு சூர்யகுமாரும், செய்துவிட்டேன் என பதில் கொடுத்துள்ளார்.

ரசிகர்கள் ரியாக்ஷன்
ரித்திகா - ரோகித் சர்மா ஜோடிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒருவரை ஒருவர் பிரிய மனமில்லாமல் பலமுறை அழுத புகைப்படம், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. அந்தவகையில் தற்போது அவர் கேட்டிருக்கும் க்யூட் கோரிக்கையும் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications