Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 முறை உலக கோப்பை இவரால காலி..! மறுபடியும் எதுக்கு ரவி சாஸ்திரி? வெடிக்கும் பூசல்..!

Recommended Video

Ravi Shastri : 2 முறை அவரால் தான் தோற்றோம்..மீண்டும் ரவி சாஸ்திரி வேண்டாம்- வீடியோ

மும்பை: ரவிசாஸ்திரியால் இருமுறை உலக கோப்பையை இழந்துள்ள நிலையில், மீண்டும் அவரையே பயிற்சியாளராக நியமிக்க முன்னாள் பயிற்சியாளர் ராபின் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை தொடர்களில் அரை இறுதி வரை இந்திய அணி எளிதில் சென்று விடுகிறது. ஆனால், கோப்பை என்று வரும் போது, அரையிறுதியுடன் நடையை கட்டுகிறது. 2019ம் ஆண்டு முதல் முறையல்ல. 3 முறை இப்படி அரை இறுதியுடன் இந்தியா வெளியேறி இருக்கிறது.

2015 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக கோப்பையில் அடுத்தடுத்து இரு முறை அரையிறுதி வரை இந்தியா சென்றது. ஆனால், அதில் தோற்று தொடரை விட்டு நடையை கட்டியிருக்கிறது.

தலைமை பயிற்சியாளர்

தலைமை பயிற்சியாளர்

அதற்கு முக்கிய காரணம் ரவி சாஸ்திரி தான் என்று இப்போது கருத்துகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. அதாவது, 2015ம் ஆண்டு உலக கோப்பை இந்திய அணியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ரவி சாஸ்திரி. 2019ம் ஆண்டு உலக கோப்பை தலைமை பயிற்சியாளராக இருந்ததும் அதே ரவி சாஸ்திரி தான்.

2 முறை வெளியேறியது

2 முறை வெளியேறியது

இந்த விவகாரம் தான் தற்போது அதிகளவு விவாதிக்கப்படுகிறது. அவர் தலைமையில் அடுத்தடுத்து இரு முறை இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறி இருக்கிறது. எனவே, மீண்டும் அவருக்கு சான்ஸ் கொடுக்காமல் வேறு ஒருவருக்கு தலைமை பயிற்சியாளர் பதவியை அளிக்க வேண்டும்.

ராபின் சிங் கருத்து

ராபின் சிங் கருத்து

அதற்கு பிசிசிஐ தயாராக வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ராபின் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது: ரவி சாஸ்திரி தலைமையில் இரு முறை இந்திய அணி உலக கோப்பை இழந்து உள்ளது. ஒரு முறை சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் ஒரு முறை டி20 உலக கோப்பை என அடுத்தடுத்து பல கோப்பைகளை இழந்திருக்கிறது.

மாற்றங்கள் அவசியம்

மாற்றங்கள் அவசியம்

அதனால் இம்முறை தலைமை பயிற்சியாளர் பதவியில் சில மாற்றங்கள் அவசியம். அதை தான் நான் பெரிதும் எதிர்பார்க்கிறேன். இந்த தோல்விகளை கருத்தில் கொண்டு பிசிசிஐ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விண்ணப்பித்த ராபின் சிங்

விண்ணப்பித்த ராபின் சிங்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராபின் சிங் விண்ணப்பித்து உள்ளார். அவர் ஏற்கனவே இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக 2007ம் ஆண்டு முதல் 2009ம் வரை இருந்துள்ளார். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

Story first published: Sunday, July 28, 2019, 17:48 [IST]
Other articles published on Jul 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+