Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லட்சுமணுக்கு காயம்- ரோஹித் சர்மா அணியில் சேர்ப்பு

நாக்பூர்: வி.வி.எஸ்.லட்சுமண் இன்னும் காயத்திலிருந்து குணமடையாததால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மும்பை வீரர் ரோஹித் சர்மாவும் சேர்க்கப்பட்டுள்ளார்.

வங்கதேச டூரின்போது விரலில் காயம் ஏற்பட்டது லட்சுமணுக்கு. இன்னும் அதிலிருந்து அவர் குணமாகவில்லை. இதையடுத்து தென்னாப்பிரிவுக்கான முதல் டெஸ்ட் போட்டியில் அவரால் விளையாட முடியாத பட்சத்தில் ரோஹித் சர்மா விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நடந்த பயிற்சியின்போது லட்சுண் வரவில்லை. மேலும் பேட்டிங்கும் செய்யவில்லை.

முதல் டெஸ்ட் போட்டியில் அவர் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக ரோஹித் சர்மாவை அணியில் சேர்த்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவுக்கும், போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கும் இடையிலான பயிற்சி ஆட்டத்தின்போது லெவன் அணிக்கு ரோஹித் சர்மாதான் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் அவர் வெறும் 20 ரன்களே எடுத்திருந்தார். இந்த நிலையில் அவரை அணியில் சேர்த்துள்ளனர்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:35 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+