Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 அதிக ரன்கள் குவித்த இந்திய பார்ட்னர்ஷிப்.. ரோஹித்- தவானுக்கு 2வது இடம்!

Recommended Video

இந்திய பார்ட்னர்ஷிப்.. ரோஹித்- தவானுக்கு 2வது இடம்!

டப்ளின்: டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய ஜோடி வரிசையில் இரண்டாமிடம் பிடித்துள்ளனர் ரோஹித் - தவான் ஜோடி.

இந்திய அணி அயர்லாந்துக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Rohit - Dhawan pair emerges second best partnership

இப்போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் அதிக ரன்கள் எடுத்த பார்ட்னெர்ஷிப்பில் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்தனர். அவர்கள் முதல் விக்கெட்டிற்கு 160 ரன்களை குவித்து சாதனை புரிந்தனர். முதல் இடத்தில் ரோஹித் - கே எல் ராகுல் இணை குவித்த 165 ரன்கள் தான் இந்திய அணியின் சாதனையாகும்.

இவர்கள் குவித்த 160 ரன்கள் உலக அளவில் 6 ஆவது அதிகபட்ச பார்ட்னெர்ஷிப் ஆகும். சர்வதேச அளவில் மார்ட்டின் குப்தில் மற்றும் காணே வில்லியம்சன் பாகிஸ்தானுக்கெதிராக 2016 ஆம் ஆண்டு முதல் விக்கெட்டிற்கு குவித்த 171 ரன்களே இதுவரை சாதனையை உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் முதல் நான்கு அதிகபட்ச பார்ட்னெர்ஷிப் , ரோஹித் சர்மா துணையுடன் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் சிறந்த துவக்க ஆட்டக்காரர்கள் வரிசையில் ரோஹித் ஷர்மாவுக்கு என்றுமே நிரந்தர இடம் உண்டு.

இந்திய டி20 அணியின் டாப் 5 பார்ட்னெர்ஷிப்ஸ் :

ரோஹித் சர்மா - கே எல் ராகுல் -- 165 ரன்கள்

ரோஹித் சர்மா - ஷிகர் தவான் -- 160 ரன்கள்

ரோஹித் சர்மா - ஷிகர் தவான் -- 158 ரன்கள்

ரோஹித் சர்மா - விராட் கோஹ்லி -- 138 ரன்கள்

கம்பிர் - சேவாக் -- 136 ரன்கள்

Story first published: Friday, June 29, 2018, 18:53 [IST]
Other articles published on Jun 29, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+