சொல்லச் சொல்லக் கேட்காமல் 3வது களம் இறக்கப்பட்ட ரோஹித் சர்மா அவுட்..!
காலே: 3வதாக ரோஹித் சர்மாவை களம் இறக்கினால் அது சரியாக வராது என்று பலரும் கூறிய நிலையில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியின்போது 3வது வீரராக ரோஹித் களம் இறக்கப்பட்டார்.9 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றம் அளித்தார் ரோஹித்.
இந்தியா, இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று காலே நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. துரதிர்ஷ்டவசமாக அஸ்வினின் புயலில் சிக்கி சின்னாபின்னமான இலங்கை அணி 183 ரன்களில் சுருண்டு போனது.

இதையடுத்து தற்போது இந்தியா பேட் செய்து வருகிறது. இந்திய அணித் தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுலும், ஷிகர் தவானும் இறங்கினர். அனுபவம் இல்லாத ராகுல் அதிரடியாக ஆடப் போய் 7 ரன்களில் வெளியேறினார். ஷிகர் தவான் நிதானம் காட்டி வருகிறார்.
3வது வீரராக ரோஹித் சர்மா இறங்கினார். வந்த வேகத்தில் 9 ரன்களுடன் அவர் வெளியேறி விட்டார். ரோஹித்தை 3வதாக களம் இறக்கினால் அது சரியாக வராது என்று நேற்றுதான் கவாஸ்கர் கூறியிருந்தார். மேலும் சில வீரர்களும் ரோஹித்துக்கு 3வது இடம் சரியாக வராது என்று கூறியிருந்தனர்.
இருப்பினும் இன்று ஒன் டவுனாக ரோஹித் களம் இறக்கப்பட்டு சோபிக்கத் தவறினார். எப்படியோ கவாஸ்கருக்கு இன்னும் ஒரு கமெண்ட் கொடுக்க பாயிண்ட் கிடைத்து விட்டது!


Click it and Unblock the Notifications