Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி 2 ஒரு நாள் போட்டிகளில் ஆட வருகிறார்கள் ரோஹித்தும், ராபினும், வினய் குமாரும்!

மும்பை: "எதிர்பார்த்தது போலவே" இலங்கைக்கு எதிரான 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்று விட்ட நிலையில், மீதமுள்ள 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்கள் செய்த குழப்பத்தால் பாதியிலேயே தொடரை முடித்துக் கொண்டு அந்த அணி நாடு திரும்பி விட்டது.

இதனால் கடுப்பாகிப் போன இந்திய கிரிக்கெட் வாரியம், வாங்க பாஸ், வந்து ஆடுங்க பாஸ் என்று இலங்கையை கூட்டி வந்து அடுத்தடுத்து வென்று வெற்றி எக்காளமிட்டு வருகிறது.

முதல் 3 போட்டிகளில் ஜெயம்

முதல் 3 போட்டிகளில் ஜெயம்

முதல் 3 போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்று இலங்கையை கடுப்பாக்கி விட்டது.

மிச்சமுள்ள 2 போட்டிகளுக்கு

மிச்சமுள்ள 2 போட்டிகளுக்கு

இந்த நிலையில் தற்போது மீதமுள்ள 2 ஒரு நாள் போட்டிகளுக்கான அணியை இந்திய தேர்வாளர்கள் குழு அறிவித்துள்ளது.

தவான், ஜடேஜாவுக்கு ரெஸ்ட்டு!

தவான், ஜடேஜாவுக்கு ரெஸ்ட்டு!

ஷிகர் தவான், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. விராத் கோஹ்லியே கேப்டனாக தொடர்கிறார்.

தம்பி ரோஹித்து!

தம்பி ரோஹித்து!

ரோஹித் சர்மாவுக்கு அழைப்பு விடுத்து சேர்த்துள்ளனர். அவர் காயம் காரணமாக முதல் 3 போட்டிகளி்ல் ஆடவில்லை. இப்போது காயம் சரியாகி திரும்ப வருகிறார்.

கேதார் ஜாதவ்

கேதார் ஜாதவ்

அதேபோல கேதார் ஜாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர் கரண் சர்மாவுக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

ராபின் உத்தப்பா

ராபின் உத்தப்பா

ராபின் உத்தப்பா விக்கெட் கீப்பராக செயல்படுவார்.

இவங்களுக்கும் ரெஸ்ட்!

இவங்களுக்கும் ரெஸ்ட்!

மற்றபடி இஷாந்த் சர்மா, முரளி விஜய், அமீத் மிஸ்ரா, விருத்திமான் சாஹா, வருண் ஆரோன் ஆகியோருக்கும் கடைசி 2 போட்டிகளில் இடம் தரப்படவில்லை.

13, 15

13, 15

நவம்பர் 13ம் தேதி கொல்கத்தாவில் 4வது போட்டியும், 15ம் தேதி ராஞ்சியில் கடைசிப் போட்டியும் நடைபெறவுள்ளது.

இதுதாங்க டீம்!

இதுதாங்க டீம்!

விராத் கோஹ்லி (கேப்டன்), அஜிங்கியா ரஹானே, ரோஹித் சர்மா, அம்பட்டி ராயுடு, சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, அக்ஷர் படேல், கரன் சர்மா, ஆர்.அஸ்வின், உமேஷ் யாதவ், தவல் குல்கர்னி, ஸ்டுவர்ட் பின்னி, வினய் குமார், கேதார் ஜாதவ்.

இந்திய அணியின் வலுவைக் குறைத்திருப்பதைப் பார்த்தால் மிச்சமுள்ள இரு போட்டிகளிலும் இலங்கை ஜெயித்து விடுமோ என்று பயந்து வருகிறது!

Story first published: Monday, November 10, 2014, 16:20 [IST]
Other articles published on Nov 10, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+